கன்னியராய்ப் பொற்புத்திரியாது
அவதரிப்பீர் வணிகர் மகளிராய் அழகு
சிறிதும் குறைபடாது தோன்றுவீர்கள் போம் - செல்லுங்கள், என்று இட்ட
சாபம் கேட்டு - என்று அளித்த சாபத்தினைக் கேட்டு, அன்பு திரிந்தார் -
நாயகனிடத்து வைத்த அன்பு வேறுபட்ட அம்மகளிர், எங்களுக்கு ஈது
அகல்வது எப்போது என - எங்கட்கு இச் சாபம் நீங்குவது எப்பொழுது
என்று வினவ, முனிவர் அம் முனிவர்கள்.
கருத்து
திரிந்தீர் என்பது விளியுமாம். திரிந்தாலனைய என்பது திரிந்த
என நின்றது. அவதரிப்பீர் - பிறக்க் கடவீர்கள். போம் - போமின்;
பன்மையேவல். அற்பு : வலித்தல். திரிந்தார் : பெயர். (16)
அந்த மாட
மதுரைநகர்க் கரசா கியசுந் தரக்கடவுள்
வந்து நும்மைக் கைதீண்டும் வழியிச் சாபங் கழியுமெனச்
சிந்தை தளர்ந்த பன்னியருந் தென்னர் மதுரைத் தொன்னகரிற்
கந்த முல்லைத் தார்வணிகர் காதன் மகளி ராய்ப்பிறந்தார். |
(இ
- ள்.) அந்த மாட மதுரை நகர்க்கு மரசு ஆகிய சுந்தரக் கடவுள்
வந்து - மாடங்கள் நெருங்கிய அம் மதுரைப் பதிக்கு இறைவனாகிய
சோமசுந்தரக் கடவுள் வந்து, நும்மைக் கைதீண்டும் வழி இச் சாபம் கழியும்
என - உங்களைக் கைதீண்டும் பொழுது இந்தச் சாபம் நீங்குமென்று கூற,
சிந்தை தளர்ந்த பன்னியரும் - (அச்சாபத்தால்) மனம் வாடிய முனி
பன்னியரும், தென்னர் மதுரைத் தொல் நகரில் - பாண்டியரின் மதுரையாகிய
தொன்மையுடைய நகரின்கண், கந்த முல்லைத் தார் வணிகர் - மணம்
பொருந்திய முல்லை மலர் மாலையை யணிந்த வணிகர்களின், காதல்
மகளிராய்ப் பிறந்தார் - அன்புடைய புதல்வியராய்த் தோன்றினார்கள்.
கைதீண்டல்
- கையாற்றொடுதல் : சாபத்தாற் சிந்தை தளர்ந்த வென்க;
தம் கற்பிற்கு இழுக்குண்டானமை கருதித் தளர்ந்த என்றுமாம். முல்லைமாலை
வணிகர்க்குரித்து. (17)
வளர்ந்து
பேதை யிளம்பருவ மாறி யல்குற் புடையகன்று
தளர்ந்து காஞ்சி மருங்கொசியத் ததும்பி யண்ணாந் தரும்புமுலை
கிளர்ந்த செல்லும் பருவத்திற் கிடைத்தா ராக விப்பான்மண்
அளந்த விடையான் வந்துவளை பகரும் வண்ண மறைகிற்பாம்.
|
(இ
- ள்.) வளர்ந்து பேதை இளம் பருவம் மாறி - வளர்ந்து
இளமையாகிய பேதைப்பருவங் கடந்து, அல்குல் புடை அகன்று -
அல்குலானது புடை பரக்க, காஞ்சிமருங்கு தளர்ந்து ஒசிய - மேகலை
யணிந்த இடையானது தளர்ந்து வளையுமாறு, அரும்புமுலை - அரும்பிய
கொங்கைகள், ததும்பி அண்ணாந்து கிளர்ந்து செல்லும் - விம்மி நிமிர்ந்து
புரித்து ஓங்கும், பருவத்தில் - மங்கைப் பருவத்தில், கிடைத்தாராக -
அடைந்தாராக; இப்பால் - இப்புறம், மண் அளந்த விடையான் வந்து - புவியை அளந்த திருமாலாகிய
இடப வூர்தியையுடைய இறைவன் வந்து,
வளை பகரும் வண்ணம் அறைகிற்பாம் - வளையல் விற்குந் தன்மையைக்
கூறுவாம்.
|