அகன்று
- அகல; எச்சத்திரிபு. அகல ஒசிய கிளர்ந்து செல்லும் என்க.
அரும்புபோலும் முலை என்றுமாம். பருவத்திற் கிடைத்தார் - பருவ
மெய்தினார். இப்பால் - இனி; அது நிற்க என்றபடி. குல பூடணன்
திகிரியுருட்டுநாள் விடையான் வந்து வளைபகரும் வண்ணம் என இயையும்.
(18)
கங்கை கரந்து
மணிகண்டங் கரந்து நுதற்கண் கரந்தொருபால்
மங்கை வடிவுங் கரந்துழையு மழுவுங் கரந்து மழவிடையூர்
அங்க ணழகர் வளைவணிக ராகி யேன மளந்தறியாச்
செங்க மலச்சே வடியிரண்டுந் திரைநீர் ஞால மகள்சூட. |
(இ
- ள்.) மழவிடை ஊர் அம்கண் அழகர் - இளமையாகிய
இடபத்தை ஊர்ந்தருளும் அழகிய கண்களையுடைய சோமசுந்தரக்கடவுள்,
கங்கை கரந்து - கங்கையை மறைத்து, மணிகண்டம் கரந்து - நீலமிடற்றினை
ஒளித்து, நுதல் கண்கரந்து - நெற்றிக் கண்ணை மறைத்து, ஒரு பால் மங்கை
வடிவும் கரந்து - ஒரு கூறாகிய உமை வடிவியும் மறைத்து, உழையும் மழுவும்
கரந்து - மானையும் மழுவையும் ஒளித்து, வளை வணிகர் ஆகி - வளையல்
விற்கும் வணிகராய், ஏனம் அளந்து அறியாச் செங்கமலச் சேவடி இரண்டும்
- திருமாலாகிய பன்றியினால் தேடி அறியப்படாத செந்தாமரை போன்ற
சிவந்த இரண்டு திருவடிகளையும், திரைநிர் ஞால மகள் சூட -
அலைகளையுடைய கடல் சூழ்ந்த புவிமாது (தனது முடியிற்) சூட.
யாவர்க்கும்
மேலோனாகிய இறைவன் ஈண்டு எளிவந்தருளும்
அருமைப்பாட்டை வியந்து கங்கை கரந்து மணிகண்டங் கரந்து
என்றிங்ஙனம் தனித்தனி கூறினார். ஊர்தற்கு விடை யிருக்கவும் தாளால்
நடந்துவந்தா ரென்பார் விடையூர் அழகர் என்றார். மணி கண்டம் - நீல
மணிபோலும் திருமிடறு. கரந்து : தன்வினை பிறவினைக்குப் பொது; ஈண்டுப்
பிறவினை. இது பல்கால் வந்தது பின்வரும் நிலை
என்னும் அணி இதுவும்
வருஞ் செய்யுளும் ஒரு தொடர். (19)
பண்டு முனிவர்
பன்னியர்பாற் கவர்ந்த வளையெ பட்டுவடங்
கொண்டு தொடுத்து மீண்டவர்கே யிடுவே மெனுமுட் கோளினர்போற்
றொண்டர் தொடுத்த வைவண்ணத் துணர்த்தார் போலத் தோள்சுமந்து
மண்டு வளையை விலைபகர்ந்து வணிக மறுகில் வருகின்றார். |
(இ
- ள்.) பண்டு முனிவர் பன்னியர் பால் கவர்ந்த வளையே -
முன்னே முனிவரின் மனைவியரிடத்துக் கவர்ந்த வளைகளையே, பட்டு வடம்
கொண்டு தொடுத்து - பட்டுக் கயிற்றாற் கோத்து வந்து, மீண்டு அவர்க்கே
இடும் எனும் உட்கோளினர்போல் - மீள அம் மகளிர்க்கே இடுவேம்
என்னுங் கருத்துடையார் போல, தொண்டர் தொடுத்த ஐவண்ணத்
துணர்த்தார் போலத் தோள் சுமந்து - அடியார்கள் தொடுத்துச் சூட்டிய
ஐந்து நிறங்களைய பூங்கொத்துக்களாலமைத்த மாலையைப்போலத்
தோளிற் றாங்கி, மண்டு வளையை விலை பகர்ந்து வணிக மறுகில்
வருகின்றார். நெருங்கிய வளையல்களை விலை கூறி வணிக வீதியில்
வருகின்றார்.
|