II


வளையல்விற்ற படலம்229



     (இ - ள்.) புங்கவன் இடுவளை புடைத்து மீளவந்து - இறைவனாகிய
அவ்வணிகள் இட்ட வளையைஉடைத்துவிட்டு மீளவும் வந்து, எங்களுக்கு
இடவிலை - எங்களுக்கு இன்னும் இடவில்லை, இடுதிர் என - இப்பொழுது
இடுவீராக என்று, கொங்கு அவிழ் பைங்குழல் எருத்தம் கோட்டி நின்று -
மணம் விரிந்த பசிய கூந்தல் சரிந்த கழுத்தினை வளைத்து (முகத்தை
மறைத்து) நின்று, அம் கரம் நீட்டுவார் - அழகிய கைகள் நீட்டுவாராய்,
ஆசை நீட்டுவார் - தமது வேட்கையைத் தோற்றுவிப்பார்கள்.

     அவனது கையைப் பரிசித்தலாகிய இன்பத்தை மேன்மேல் நுகர
விரும்பி இங்ஙனம் வளையை உடைத்து வந்து மீள இட வேண்டுவர் என்க.
முன்பு வளையல் இடப் பெற்றவராகலின் தமதுருவைக் காட்டாது முகத்தை
மறைத்தற்கு எருத்தங் கோட்டுவாராயினர், கூந்தலின் முகம் மறைய என்பார்
‘பைங்குழல் எருத்தகோட்டி’ என்றார். நாணாற் கோட்டுதலுங் கொள்க.
ஆசை நீட்டுதல் - ஆசையைத் தோற்றுவித்தல்; மிகுவித்தலுமாம். ஆல் :
அசை. மேற்செய்யுளில் ‘வண்டுகளேற்றுவார் மையலேற்றுவார்’ என்றும்,
இச்செய்யுளில், ‘அங்கர நீட்டுவார் ஆசை நீட்டுவார்’ என்றும் கூறிய அழகு
பாரட்டாற் பாலது. (27)

எமக்கிடு மெமக்கிடு மெனப்பின் பற்றியே
அமைத்தடந் தோளினா ரனங்கள் பூங்கணை
தமைத்துளை படுத்துவோர் சார்பி லாமையாற்
கமைப்புறு நாண்முதற் காப்பு நீங்கினார்.

     (இ - ள்.) எமக்கு இடும் எமக்கு இடும் எனப் பின்பற்றி - எங்களுக்கு
இடும் எங்களுக்கு இடும் என்று பின் தொடர்ந்து, அமைதடம் தோளினார் -
மூங்கிலை ஒத்த பருத்த தோளையுடைய வணிககுல மகளிர், அனங்கன்
பூங்கணை தமைத் துளைபடுத்த - மத வேளின் மலர் வாளிகள் தம்மைத்
துளைக்க, ஒர் சார்பு இலாமையால் - (அதனை நீக்கி) ஒரு பற்றுக்கோ
டில்லாமையால், கமைப்பு உறு நாண்முதல் காப்பு நீங்கினார் -
பொறுத்தலையுற்ற நாண முதலாகிய காவலாகிய காவலினின்றும் நீங்கினார்கள்.

     சார்பு - துணை. கமைப்பு - பொறுத்தல்; தம்மாற் பொறுக்கப்
பெற்றிருந்த நாண்முதலாகிய என்க. நாண்முதலியன காவலாதலையும்
காமமானது அதனை யழிப்பதனையும்,

"காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு"

என்னும் முப்பாலால் அறிக. (28)

முன்னிடு வளையெலாங் கழல முன்புசூழ்ந்
தின்னவை பெரியவே றிடுமென் றிட்டபின்
அன்னவு மனையவே யாக மீளவந்
தின்னமுஞ் சிறியவா விடுமென் றேந்துவார்.