II


எல்லாம்வல்ல சித்தரான படலம்23



     குறியின் விகாரமே நெடிலாதலால் ஆ என்பதனை அகரத்து ளடக்கியும்
வா என்பதனை வகரத்துளடக்கியும் ‘அகரமாதி மூன்று,’‘வகரமாதி மூன்று’
என்றார். ஆகருடணம் முதலியவற்றைக் குறிப்பாற் கூறலுறுவார் அவற்றின்
முதலெழுத்தால் ‘அகாரம், வகாரம்’ என்றிங்ஙனம் கூறுவ ராகலின், அதனைப்
புலப்படுப்பான் வேண்டி ‘அகரமாதி மூன்றாகிய,’ ‘வகரமாதி மூன்றாகிய’
என்று கூறிவைத்துப், பின் பெயர்களையும் கிளந்தோதினா தாமதஞகுண சித்தி
யெனப்படும் எட்டனுள் தம்பனம், மோகனம் என்னும் இரண்டு மொழித்து
ஒழிந்தவற்றை இதனுள் ஓதினார். ஆகருடணம் - சேய்மையிலுள்ளதை
அண்மையில் வர இழுத்தல். அதிர்ச்சியம் - கட்புலனாவதைப் புலனாகாமல்
மறையச் செய்தல். அஞ்சனம் - மறைந்திருப்பதை வெளிப்படுத்திக் காட்டுதல்.
வசியம் - பகைவரையும் உறவாக்குவது. வாதம் - இரும்பு முதலியவற்றைப்
பொன்னாக்குவது. வயத்தம்பம் - முதியோரை இளையராகவும் இளையோரை
முதியராகவும் செய்வது. இடையிட்டு நின்ற ஏகாரங்கள் எண்ணுப்பொருள்
குறித்தன;

"எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும்
எண்ணுக் குறித்தியலு மென்மனார் புலவர்"

என்பது தொல்காப்பியம். (17)

வேத நூறெளி யார்களெக் கலைகளும் விளங்கப்
பூதி நாவினிற் சிதறியும் பூழியன் காதன்
மாத ராரொடும் பயில்புது மணமலர்க் காவிற்
காத நீண்டகோட் டெங்கினைக் கரும்பனை செய்தும்.

     (இ - ள்.) வேத நூல் தெளியார்கள் எக்கலைகளும் விளங்க - மறை
நூல் முதலிய யாவுந் தெளியாதவர்களுக்கு எல்லாக்கலைகளும் விளங்க,
நாவினில் பூதி சிதறியும் - அவர் நாவிலே திருநீற்றைச் சிதறியும், பூழியன் -
பாண்டியனானவன், கால் மாதராரொடும் பயில் புதுமணம் மலர்க்காவில் -
காதல் மகளிலொடும் விளையாடும் புதிய மணமிக்க மலர்கள் நிறைந்த
சோலையிலுள்ள, காதம் நீண்ட கோள் தெங்கினைக் கரும்பனை செய்தும் -
காத அளவு நீண்டுயர்ந்த கோட்புக்க தெங்கினைக் கரிய பனையாகச்
செய்தும்.

     தெளியார்களுக்கு என்னும் நான்கனுருபு தொக்கது. கோட்டெங்கு -
கோட்புக்க தெங்கு; காய்த்த தெங்கு. (18)

ஏனை வான்றருக் குலங்களைப் புட்களை யிருகோட்
டானை யாதிபல் விலங்கினை யொன்றையொன் றாக
ஞான நோக்கினா னோக்கியு நாடிய விளையோர்
மானி னோக்கிய ராகிலோ மெனவெழில் வாய்ந்தும்.

     (இ - ள்.) ஏனை வான் தருக் குலங்களை - மற்றைய உயர்ந்த மரக்
கூட்டங்களையும், புட்களை - பறவைகளையும், இரு கோட்டு ஆனை ஆதி