(இ
- ள்.) முன் இடுவளை எலாம் கழல - முன்னே இட்ட
வளைகளனைத்துங் கழன்றுவிட; மன்பு சூழ்ந்து - (அம்மகளிர்) வணிகர்
முன்பு மொய்த்து, இன்னவை பெரிய - இவ்வளைகள் அளவிற் பெரியன
(ஆதலின் கழன்றன); வேறு இடும் என்று - வேறு வளைகள் இடுமென்று
கூறி, இட்டபின் - அங்ஙனம் இட்டபின், அன்னவும் அனையவே ஆக -
அவையும் அங்ஙனமே கழல, மீளவந்து - மீண்டும் வந்து; இன்னமும்
சிறியவா இடும் என்று ஏந்துவார் - இன்னுஞ் சிறிய வளைகளாக இடும்
என்று கையை ஏந்துவார்.
பெரிய
: அன்பெறாத பலவின்பாற் குறிப்புமுற்று. சிறியவாக என்பது
விகாரமாயிற்று. ஏந்துதல் கையை நிமிர்த்தி நீட்டுதல். (29)
பின்னிடு வளைகளுஞ் சரியப் பேதுறா
மன்னெதிர் குறுகிநீர் செறித்த மொய்வளை
தன்னொடு கலைகளுஞ் சரிவ தேயென
மின்னென நுடங்கினார் வேனெ டுங்கணார். |
(இ
- ள்.) பின் இடுவளைகளும் சரிய - பின் இட்ட வளைகளுங்
கழல, பேதுறா - மனமயங்கி, முன் எதிர் குறுகி - வணிகர் முன் சென்று
எதிர் நின்று, நீர் செறித்த மொய்வளை தன்னொடு - நீர்செறிய இட்ட
நெருங்கிய வளையோடு, கலைகளும் சரிவதே என - மேகலைகளுங் கழல்
கின்றனவே என்று, வேல் நெடுங்கணார் - வேல்போன்ற நெடிய
கண்களையுடைய அம்மகளிர், மின் என நுடங்கினார் - மின்னல்போலத்
துவண்டு (வெள்கினார்கள்).
பேது
- மயக்கம். பேதுறா : செய்யா என்னும் வாய்பாட்டு
வினையெச்சம், சரிவது எனப் பன்மையில் ஒருமை வந்தது. சரிவதே என -
சரியா நிற்கின்றது, இஃதொரு வியப்பிருந்தவாறென்னே என்று. நுடங்குதல்
நாணினாலாயது. (30)
இவ்வளை போல்வளை* யாமுன் கண்டிலேம்
மெய்வளை வணிகிரிவ் வரிய வெள்வளை
எவ்வயி னுள்ளவின் றினிய வாகியெம்
மெய்ம்மயிர் பொடிப்பெழ+வீக்கஞ் செய்தவே. |
(இ
- ள்.) வளைவணிகிர் - வளையல் விற்கும் வணிகீரே, இவ்
வளைபோல் வளையாம் முன் கண்டிலேம் - இந்த வளையல்போன்ற
வளைகயை யாம் முன்னே பார்த்திலோம்; மெய் - இது உண்மை; இவ்வரிய
வெள்வளை எவ்வயின் உள்ள - இந்த அருமையான வெள்ளிய வளையல்கள்
எவ்விடத்தில் உள்ளன? இன்று இனிய ஆகி எம் மெய் மயிர் பொடிப்பு எழு
வீக்கம் செய்த - இன்று இனியனவாய் எம் உடம்பினை மயிர் முகிழ்ப்பு
உண்டாகப் பூரிக்கச் செய்தன.
உடல்கூனிய
வணிகரே எனப் பொருள்கூறுவாருமுளர்; அது
பொருந்தாமை யுணர்க. உள்ள, இனிய, செய்த என்பன அன்சாரியை
பெறாது நின்றன. வீக்கஞ்செய்த என்பது ஒரு சொல்லாகி மெய்யை
என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. (31)
|