முப்பத்து
மூன்றாவது அட்டமாசித்தி யுபதேசித்த படலம்
|
[எழுசிரடி
யாசிரிய விருத்தம்]
|
கொத்தி
லங்கு கொன்றை வேய்ற்த கூட லாதி மாடநீள்
பத்தி யம்பொன் மறுக ணைந்து வளைப கர்ந்த பரிசுமுன்
வைத்தி யம்பி னாமி யக்க மாதர்* வேண்ட வட்டமா
சித்தி தந்த திறமி னித்தெ ரிந்த வாறு செப்புவாம். |
(இ
- ள்.) இலங்கு கொன்றைக் கொத்து வேய்ந்த கூடல் ஆதி -
விளங்கா நின்ற கொன்றையினது பூங்கொததினை யணிந்த கூடற் பதியில்
எழுந்தருளிய முதல்வராகிய சோமசுந்தரக்கடவுள், நீள்மாட பத்தி அம்பொன்
மறுகு அணைந்து - நீண்ட மாட வரிசைகளையுடைய அழகிய
செல்வத்தையுடைய வீதியிற் சென்று, வளைபகர்ந்த பரிசு முன் வைத்து
இயம்பினாம் - வளையல் விற்ற திருவிளையாடலை முன் எடுத்துக் கூறினாம்;
இயக்க மாதர் வேண்ட - இயக்க மகளிர் குறையிரக்க, அட்டமா சித்தி தந்த
திறம் - பெரிய எட்டுச் சித்திகளையும் உபதேசித்த திருவிளையாடலை, இனி
தெரிந்தவாறு செப்புவாம் - இனி அறிந்தவாறு கூறுவோம் எ - று.
அம்பொன்
மாடம் என இயைத்தலுமாம். பரிசு, திறம் என்பவற்றைத்
திருவிளையாடல் என்றுரைத்துக் கொள்க. (1)
மின்ன லங்கல வாகை வேல்வி ழுப்பெருங் குலத்தினிற்
றென்ன வன்ற னாணை நேமி திசையெ லாமு ருட்டுநாள்
முன்னை வைக லூழி தோறு மோங்கு மொய்வ ரைக்கணே
மன்னுதன்ப ராரை+யால நிழன்ம ருங்கு மறைமுதல். |
(இ
- ள்.) வாகை அலங்கல் மின்வேல் - வெற்றி மாலை சூடிய மின்
போலும் வேற்படையினை ஏந்திய, விழுப்பெருங்குலத்தினில் - மேன்மை
மிக்க பாண்டியர் குலத்தில் வந்த, தென்னவன் - குலபூடன வழுதி யானவன்,
தன் ஆணை நேதி திசை எலாம் உருட்டு நாள் - தனது ஆணைத்
திகிரியைத் திசை முழுதும செலுத்தி வருநாளில், ஊழிதோறும் ஓங்கும் மொய்
வரைக்கண் - ஊழிக்காலந் தோறும் வளருகின்ற வலிய திருக்கைலாய
மலையின்கண், மன்னு தன் பராரை ஆல நிழல் மருங்கு - நிலைபெற்ற தனது
பருத்த அரையினையுடைய வடவாலின் நிழலின்கண், மறைமுதல் - வேத
முதல்வனாகிய இறைவன், முன்னை வைகல் - முன்னொரு நாள்.
(பா
- ம்.) * இயக்கி மாதர். +தண்பிராரை.
|