பௌவ மூழ்கு சூர்த டிந்த பால னுக்கு முலைகொடுத்
தெவ்வ மாய வினைக டீரி யக்க மாத* ரறுவருந்
தெய்வ நீறு முழுத ணிந்து செய்ய வேணி கண்டிகைச்
சைவ வேட மாதவந் தரித்து வந்து தோன்றினார். |
(இ
- ள்.) பௌவம் மூழ்கு சூர் தடிந்த பாலனுக்கு - கடலின் கண்
மூழ்கியொளித்த சூரபன்மனை வதைத்தருளிய முருகக்கடவுளுக்கு, முலை
கொடுத்து - பால் கொடுத்தலினால், எவ்வம் ஆய வினைகள் தீர்
இயக்கமாதர் அறுவரும் - துன்பமாகிய வினைகள் நீங்கப்பெற்ற இயக்க
மகளிர் அறுவரும், தெய்வ நீறு முழுது அணிந்து - தெய்வத் திருநீற்றினை
உடல் முழுதும் பூசி, செய்ய வேணி கண்டிகை - சிவந்த சடையையும்
உருத்திராக்க வடத்தையும் (தாங்கி,) மா சைவ தவ வேடம் தரித்து -
(இங்ஙனமாகப்) பெருமை பொருந்திய சைவத் தவக்கோலம் பூண்டு, வந்து
தோன்றினார் - வந்து தோன்றினார்கள்.
துன்பத்திற்குக்
காரணமாகிய வினையைத் துன்பமாகிய வினையென
உபசரித்தார். அறுவர் கார்த்திகை மகளிர் என்று கூறப்படுவோர். வேணியும்
கண்டிகையும் தாங்கி என ஒருசொல் வருவித்துரைக்க. (5)
மந்தி ரச்சி லம்ப லம்பு மலர டிக்கண் வந்திசெய்
தெந்தை யட்ட சித்தி வேண்டு மெங்க ளுக்கெ னத்தொழா
அந்த ளிர்க்கை யவரி ரப்ப வண்ண றன்ம டித்தலந்
தந்தி ருக்கு மாதை யங்கை சுட்டி யீது சாற்றுமால். |
(இ
- ள்.) அம் தளிர்க்கையவர் - (அங்ஙனம் தோன்றிய) அழகிய
தளிர் போலும் கையையுடைய அம் மகளிர், மந்திரச் சிலம்பு அலம்பும் -
வேதமாகிய சிலம்பு ஒலிக்கும், மலர் அடிக்கண் வந்தி செய்து - மலர்
போன்ற திருவடியின் கண் (வீழ்ந்து) வணங்கி, தொழா - தொழுது, எந்தை
- எம் தந்தையே, எங்களுக்கு அட்ட மாசித்தி வேண்டும் என -
அடியேங்களுக்கு அட்டமாசித்தியைத் தெரித்தருள வேண்டு மென்று, இரப்ப
- குறையிரப்ப, அண்ணல் - இறைவன், தன் மடித்தலம் தந்து இருக்கும்
மாதை - தனது மடித்தலத்தினைப் பெற்றிருக்கும் உமை நங்கையை, அம் கை
சுட்டி ஈது சாற்றும் - அழகிய கையினாற் சுட்டி இதனைக்
கூறியருளுவானாயினன்.
மந்திரம்
என்றது ஈண்டு வேதத்தை. கை அவர் எனப்
பிரித்துரைத்தலுமாம். தந்து - தரப்பெற்று. ஆல் : அசை. (6)
[அறுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
அலர்பசும்
பொலங்கொம் பன்ன வணங்கிவ ணிறைவா லெங்கும்
மலர்பரா சத்தி யாகி மகேசையா யணிமா வாதிப்
பலர்புகழ் சித்தி யெட்டும் பணிந்துகுற் றேவல் செய்யுஞ்
சிலதிய ராகிச் சூழ்ந்து சேவகஞ் செய்ய வைகும். |
(பா
- ம்.) * இயக்கி மாதர்.
|