முகத்தினையுடைய அப்பெண்களைச்
சினந்து, நீர் - நீவிர், பட்டமஙகைப்
பழுமர முதல் - பட்டமங்கை யென்னும் பதியிலே ஆலமரத்தினடியில்,
அஞ்ஞானப் பாறையாய்க் கிடமின் என்ன - அசேதனமாகிய கற்பாறையாய்க்
கிடப்பீராக என்று சபிக்க, கழுமல் உற்று அவர் தாழ்ந்து - அவர்கள்
மயக்கமுற்று வணங்கி, இச்சாபம் என்று கழிவது என்றார் - இந்தச் சாபம்
நீங்குவது எப்பொழுது என்று வினவினர்.
உபதேசத்தை
மறந்த குற்றத்தால் அறிவில்லாத பாறையாய்க்
கிடக்குமாறு சபித்தார். கழுமல் - மயங்கல். உற்றவர் என வினைப்
பெயருமாம். (9)
இப்படிக் கருங்க லாகிக் கிடத்திரா யிரமாண் டெல்லைக்
கப்புற மதுரை நின்று மடுத்துமைத் தொடுத்த சாபத்
துப்பற் நோக்கி நுங்க டொல்லுரு நல்கிச் சித்தி
கைப்படு கனிபோற் காணக் காட்டுதும் போதி ரென்றான். |
(இ
- ள்.) ஆயிரம் ஆண்டு எல்லைக்கு - ஆயிரம் ஆண்டளவு
காறும், இப்படி கருங்கல் ஆகி கிடத்திர் - இங்ஙனங் கருங்கற் பாறையாய்க்
கிடப்பீர், அப்புறம் - அதன்மேல், மதுரை நின்றும் அடுத்து -
மதுரையினின்றும் வந்து, உமைத் தொடுத்த சாபத்துப்பு அற நோக்கி -
உங்களைத் தொடுத்த சாபத்தின் வலிமை நீங்குமாறு கடைக்கணித்து,
நுங்கள் தொல் உரு நல்கி - உங்கள் பழைய வடிவையுங் கொடுத்து -
சித்தி - எட்டுச் சித்திகளையும், கைப்படு கனிபோல் காணக் காட்டுதும் -
கையிலுள்ள நெல்லிக்கனிபோல ஐயந்திரிபின்றிக் காணுமாறு காட்டுவோம்;
போதிர் என்றான் - செல்வீர் என்று அருளிச் செய்தான்.
எல்லைக்கு
- எல்லைகாறும். துப்பு - வலி. கிடத்திர். போதிர்
என்பனவற்றில் த் : எழுத்துப்பேறு. (10)
[வஞ்சித்துறை]
|
கொடியனார்க
ளறுவரும்
நெடியவானி மிர்ந்துகார்
படியும்பட்ட மங்கையால்
அடியிற்பாறை யாயினார். |
(இ
- ள்.) கொடி அனார்கள் அறுவரும் - பூங்கொடி போன்ற
அம்மாதர் அறுவரும், நெடிய வான் நிமிர்ந்து - நீண்ட விசும்பின்கண்
உயர்ந்து, கார்படியும் - மேகம் பொருந்தப்பெற்ற பட்ட மங்கை ஆல்
அடியில் - பட்ட மங்கை என்னும் பதியில் உள்ள ஆலமரத்தினடியில்,
பாறை ஆயினார் - கருங்கற் பாறையாயினார்கள்.
நிமிர்ந்து
படியும் ஆல் என்க. இதனை முச்சீரடியாக்கி வஞ்சி
விருத்தம் என்னலுமாம். (11)
|