II


அட்டமாசித்தி யுபதேசித்த படலம்241



     (இ - ள்.) வேதகத்து இரும்பு தாக்க - பரிசவேதியில் இரும்பு தாக்குற,
ஆக்கம் உற்ற பொன் என - (அவ்விரும்பின் றன்மை கெட்டு) ஆகிய
பொன்னைப்போல, நீக்கம் அற்ற இருள் மலவீக்கம் அற்றுவிட்டது -
(இறைவன் திருவருட் பார்வையால்) நீங்காத ஆணவமலத்தின் கட்டு அற்று
விட்டது.

     மேற் செய்யுளிலுள்ள ‘அடிகள் நோக்க’ என்பதனை ஈண்டும்
கூட்டியுரைக்க. நீக்க மற்ற - பிரிப்பின்றியிருந்த. வீக்கம் - செறிவுமாம். (17)

நிறையுமன் பெனுந்நதி
பொறையெனுங் கரைகடந்
திறைவனின் னருட்கடற்
றுறையின்வாய் மடுப்பவே.

     (இ - ள்.) நிறையும் அன்பு எனும் நதி நிறைந்த அன்பு என்னும்
யாறானது, பொறை எனும் கரை கடந்து - பொறுமை யென்னும் கரையைக்
கடந்து, இறைவன் இன் அருள் கடல் துறையின்வாய் மடுப்ப -
சிவபெருமானது இனிய திருவருளாகிய கடலின் துறையின் கண் (சென்று)
கலக்க.

     அடக்கலாற்றாது பொங்கி யெழுந்த தென்பார் ‘பொறை யெனுங் கரை
கடந்து’ என்றார். (18)

எழுந்திறை யடிக்கணே
அழுந்துநேச மொடுதவக்
கொழுந்தனார்க ளறுவரும்
விழுந்திறைஞ்சி னரரோ.

     (இ - ள்.) தவக்கொழுந்து அனார்கள் அறுவரும் - தவத்தின்
கொழுந்து போன்றாராகிய அம்மகளிரறுவரும், எழுந்த - எழுந்த, அழுந்து
நேசமொடு - ஆழ்ந்த அன்புடன், இறை அடிக்கண் விழுந்து இறைஞ்சினார்
- இறைவன் திருவடியின்கண் வீழ்ந்து வணங்கினார்கள்.

     அறுவரும் எழுந்து நேசமொடு இறைஞ்சினார் என்க. அரோ : அசை.
(19)

குமரற்கூட்டு மிளமுலை
உமையொப்பார்கள் சென்னிமேல்
அமலச்சோதி யங்கையாங்
கமலப்போது சூட்டினான்.

     (இ - ள்.) குமரற்கு ஊட்டும் இளமுலை உமை ஒப்பார்கள்
சென்னிமேல் - முருகக் கடவுளுக்குப் பால அருத்தும் இளமையாகிய
கொங்கையையுடைய உமையம்மைபோலும் அப்பெண்களின் முடியின்