மேல், அமலச்சோதி
- தூய ஒளிவடிவினனாகிய இறைவன், அம்கை ஆம்
கமலப்போது சூட்டினான் - அழகிய கையாகிய தாமரை மலரைச் சூட்டினான்.
சென்னியிற்
கை வைத்தல் பரிச தீக்கை. போது என்றதற்கேற்பச்
சூட்டினான் என்றார். (20)
சித்தியெட்டு மந்நலார்
புத்தியிற்கொ ளுந்தவே
கைத்தலத்தில் வைத்ததோர்
முத்தெனத்தெ ருட்டுவான். |
(இ
- ள்.) சித்தி எட்டும் - எட்டுச் சித்திகளையும், அந்நலார் புத்தியில்
கொளுந்த - அம்மகளிரின் அறிவிற் பொருந்த, கைத்தலத்தில் வைத்தது ஓர்
முத்து எனத் தெருட்டுவான் - கையின்கண் வைத்த முத்தினைப் போலத்
தெளிவிப்பானாயினன்.
கைக்கனி
என்பதுபோல் மணி முதலியவும் கூறப்படும். ஓர் : இசை
நிறைக்க வந்தது. (21)
[அறுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
அணிமா
மகிமா விலகிமா வரிய கரிமா பிராத்திமலப்
பிணிமா சுடையோர்க் கடைவரிய பிராகா மியமீ சத்துவமெய்
துணிமா யோகர்க் கெளியவசித் துவமென் றெட்டா
மிவையுளக்கண்
மணிமா சறுத்தோர் விளையாட்டின் வகையா மவற்றின்
மரபுரைப்பாம்.
|
(இ
- ள்.) அணிமா மகிமா இலகிமா அரிமா கரிமா பிராத்தி -
அணிமாவும் மகிமாவும் இலகிமாவும் அருமையையுடைய கரிமாவும்
பிராத்தியும், மலப்பிணி மாசு உடையோர்க்கு அடைவு அரிய பிராகாமியம்
ஈசத்துவம் - மல நோயாகிய குற்றமுடையார்க்கு அடைதலரிய பிராகாமியமும்
ஈசத்துவமும், மெய்துணிமா யோகர்க்கு எளிய வசித்துவமுகி என்று எட்டு
ஆம் - மெய்ப்பொருளை யுணர்ந்து பெரிய யோம யருக்கு எளிய
வசித்துவமும் என்று அச்சித்தி எட்டு வகைப்படும்; இவை உளக் கண்மணி
மாசு அறுத்தோர் விளையாட்டின் வகையாம் - இவைகள் உள்ளத்தின்கண்
கரிய அவிச்சையை நீக்கினவர்களின் விளையாட்டின் வகையாகும; அவற்றின்
மரபு உரைப்பாம் - அவற்றின் தன்மையைக் கூறுவாம்.
மாயோகர்க்கு
எளிய என்றது ஏளையோர்க்கு அரிய என்றபடி. மணி -
கருமை. (22)
அறவுஞ் சிறிய
வுயிர்தொறுந்தான் பரம காட்டை
யணுவாய்ச்சென்
றுறையுஞ் சிறுமை யணிமாவா முவரி ஞால முதன்மேலென்
றறையுஞ் சிவாந்த மாறாறு முள்ளும் புறனு மகலாதே
நிறையும் பெருமை தனையன்றோ மகிமா வென்னு
நிரம்பியநூல். |
|