புகுதலும், பலத்தின்
மிகுந்த பிராத்தியதாம் - பயனால் மிக்க பிராத்தியாகும்;
பரகாயத்தில் நண்ணுதல் - வேறு உடலிற் புகுதலும், வான் புலத்தின் இயங்கல்
- வானின்கண் சஞ்சரித்தலும், இச்சித்த போகம் அனைத்தும் - விரும்பிய
போகமெல்லாம், தான் இருக்கும் தலத்தில் நினைந்தபடி வருதல் - தான்
இருக்குமிடத்தில் நினைந்த வண்ணமே வரச்செய்தலும், பிராகாமியம் ஆம் -
பிராகாமிய மாகும்.
அது
: பகுதிப்பொருள் விகுதி. வருவித்தல் என்பது வில்விகுதி குன்றி
நின்றது. (25)
விண்ணி லிரவி
தன்னுடம்பின் வெயிலா லனைத்தும்
விளக்குதல்போல்
மண்ணி லுளவாம் பொருள்பலவுங் கால மூன்றும் வானத்தின்
கண்ணி லுளவாம் பொருளுந்தன் காயத் தொளியா லிருந்தறிதல்
எண்ணி லிதுவு மறையொருசார் பிராகா மியமென் றியம்புமால். |
(இ
- ள்.) விண் இல் இரவி தன் உடம்பின் வெயிலால் - வானின் கண் உள்ள
சூரியன் தனது உடலின் ஒளியால், அனைத்தும் விளக்குதல் போல் -
எல்லாவற்றையும் விளங்கச் செய்தல்போல, மண்ணில் உளவாம் பொருள்
பலவும் - நிலவுலகில் உள்ள பொருளனைத்தையும் காலம் மூன்றும் - மூன்று
காலங்களையும், வானத்தின் கண்ணில் உளவாம் பொருளும் -
விண்ணுலகிலுள்ள பொருள்களையும், தன் காயத்து ஒளியால் இருந்து அறிதல்
- தனது உடம்பின் ஒளியினால் (விளங்கச் செய்து) தானிருந்த வண்ணமே
அறிதலாகிய, இதுவும் - இதனையும், எண்ணில் - ஆராயுமிடத்து, மறை
ஒருசார் பிராகாமியம் என்று இயம்பும் - வேதம் ஒருபுடை பிராகாமியம்
என்று கூறா நிற்கும்.
தான்
ஓரிடத்திருந்தே யாவற்றையும் தன் காயத்தொளியால் விளங்கச்
செய்து அறிதல் என்க. (26)
ஈச னெனமுத தொழிலுந்தன் னிச்சை வழசெய் தெழுபுரவித்
தேசன் முதற்கோள் பணிகேட்பத் திகழ்வ தீசத் துவமாகும்
பூச லவுணர் புள்விலங்கு பூத மனிதர் முதலுலகும்
வாச வாதி யெண்மருந்தன் வசமாக் கொள்கை வசித்துவாம். |
(இ
- ள்.) ஈசன் என முத்தொழிலும் தன் இச்சை வழிசெய்து
சிவபெருமானைப்போல ஆக்கலும் அழித்தலும் காத்தலுமாகிய மூன்று
தொழில்களையும் தன் இச்சையின்படியே இயற்றி, எழு புரவித் தேசன்
முதல் கோள் பணி கேட்ப - ஏழு குதிரைகளையுடைய சூரியன் முதல்
ஒன்பது கோள்களும் ஏவல் கேட்க, திகழ்வது ஈசத்துவம் ஆகும்.
விளங்குவது ஈசத்துவமாகும்; பூசல் அவுணர் புள்விலங்கு பூதம் மனிதர்
முதல் உலகும் - போர்த் தொழிலையுடைய அவுணரும் பறவையும் விலங்கும்
பூதமும் மனிதரும் முதலிய பல்வகை உயிர்களையும், வாசவ ஆதி எண்மரும்
- இந்திரன் முதலிய திக்குப்பாலர் எண்மரையும், தன் வசமாகக் கொள்கை
வசித்துவம் ஆம் - தன் வசமாகச் செய்து கொள்வது வசித்துவம் ஆகும்.
|