II


எல்லாம்வல்ல சித்தரான படலம்25



     வாங்கலர் : எதிர்மறை முற்று எச்சமாயது. வாங்குதல் - மீட்டல்
ஆள்வினை - முயற்சி; செங்கடனுமாம். முத்தர் - விடுபட்டோர், சீவன்
முத்தி பெற்றோர். (21)

இனைய செய்தியை யுழையரா லிறைமக னறிந்தான்
அனைய சித்தரை யிங்ஙன்ந் தருகென வடுத்தார்
தனைய கற்றினன் சித்தரைச் சார்ந்தவர் தாமும்
வினையை வென்றவ ராடலை வியந்துகண் டிருந்தார்.

     (இ - ள்.) இனைய செய்தியை - இந்நிகழ்ச்சியை, இறைமகன்
உழையரால் அறிந்தான் - அபிடேக பாண்டியன் ஒற்றரால் அறிந்து, அனைய
சித்தரை இங்ஙனம் தருக என - அவ்வித்தக சித்தரை இட அழைத்து
வாருங்கள் என்று, அடுத்தார் தனை அகற்றினன் - பக்கத்து நின்றவர்களைப்
போக்கினன்; சித்தரைச் சார்ந்து அவர்தாமும் - சித்தரை அடைந்து அவரும்,
வினையை வென்றவர் ஆடலைக் கண்டு வியந்து இருந்தார் - இயல்பாகவே
பாசங்களினீங்கிய அச்சித்தரின் திருவிளையாடலைப் பார்த்து வியந்து தம்மை
மறந்திருந்தனர்.

     தருகென, அகரந் தொக்கது. தமை எனற்பாலது தொடை நோக்கித்
தனையென நின்றது. தம் : சாரியை.; அவர்தாமும் சார்ந்து என்க; தாம் :
அசை. (22)

அமைச்சர் தங்களை விடுத்தன னமைச்சருஞ் சித்தர்
தமைச் சரண்பணிந் தரசன்முன் வருகெனத் தவத்தோர்
எமக்கு மன்னனா லென்பய னெனமறுத் திடமண்
சுமக்கு மன்னவன் றம்மவர்* தொழுதனர் போனார்.

     (இ - ள்.) (அவர்கள் வாராமையைக் கண்ட வழுதி பின்னும்
அமைச்சர் தங்களை விடுத்தனன் - மந்திரிகளை ஏவினன்; அமைச்சரும்
சித்தர் தமைச்சரண் பணிந்து - அவர்களும் சித்தமூர்த்தியின் திருவடிகளை
வணங்கி, அரசன் முன்வருக என - மன்னன் முன் வரக்கடவீர் என
வேண்ட, தவத்தோர் - யோகசித்தர், எமக்கு மன்னனால் என்பயன் என
மறுத்திட - எமக்கு அரசனாலாம் பயன் யாது என்று மறுக்க, மண் சுமக்கு
மன்னவன் தம்மவர் தொழுதனர் போனார் - நிலவுலகினைத் தாங்கும்
அரசனுடைய அமைச்சர்கள் தொழுது போயினர்.

     தம் என்பன சாரியை. சரணினை யென உருபை மாறுக. வருகென :
தொகுத்தல். பெருமிதந்தோன்ற ‘எமக்கு’ போயினர்.

"வையமும் தவமும் தூக்கின் தவத்திற்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது"

என்பது தோன்றத் ‘தவத்தோர் எனவும், ‘மண்சுமக்கு மன்னவன்’ எனவும்
கூறினார். வருதற்கு மறுத்திட வென்க. தம்மவர் - தமர். தொழுதனர் :
முற்றெச்சம். (23)


     (பா - ம்.) * தம்மனோர்.