இறைவன்
திருநாமம் பஞ்சாக்கர மென்பதனையும், அஃது
அடியார்களின் இடையூறு களையும் வாள்போல்வ தென்பதனையும்,
"படைக்கல மாகவுன்
னாமத்தெழுத்தஞ்செ னாவிற் கொண்டேன்" |
என்று
திருநாவுக்கரசர் அருளிச்செய்தலால் அறிக. நாமம் முதலியவற்றை
வாள் முதலியவாக உருவகஞ் செய்தமையால் இஃது உருவகவணி.
அரோ :
அசை. (8)
கல்லு மாரழ லத்த மும்பல கலுழி யுங்குண கனைகடற்
செல்லு மாநதி பலவும் வானிமிர் கன்ன லுஞ்செறி செந்நெலும்
புல்லு மாநில னுங்க ழிந்து புறங்கி டக்கந டந்துபோய்
வல்லு மாமுலை யார்க ணம்பயில் வையை யந்துறை யெய்தினான். |
(இ
- ள்.) கல்லும் - மலைகளும், ஆர் அழல் அத்தமும் - நிறைந்த
நெருப்புப்போலும் பாலைநிலமும், பல கலுழியும் - பல காட்டாறுகளும், குண
கனைகடல் செல்லும் மாநதி பலவும் - ஒலிக்கின்றன கீழ்க்கடலிற் சென்று
கலக்கும் பெரிய பல நதிகளும், வான்நிமிர் கன்னலும் செந்நெலும் புல்லும்
மாநிலனும் - வானை யளாவிய கரும்பும்களும், கழிந்து புறம் கிடக்க
நடந்துபோய் - பிற்பட்டுப் புறத்தே கழிய கடந்து சென்று, வல்லு மா
முலையார் கணம்பயில் வையை அம் துறை எய்தினான் - சூதாடு
கருவிபோன்ற பெரிய கொங்கையினையுடைய மகளிர் கூட்டம் நீராடிப்
பயிலும் வையையாற்றின் அழகிய நீர்த்துறையை யடைந்தனன்.
ஆர்
அழல் அத்தம் - இயங்குதற்கரிய அழலையுடைய சுரம்
என்றுமாம். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம் என்பன முறையே
கூறப்பட்டன. (9)
குறுகு முன்ன ரதிர்ந்து வையை கொதித்த கன்கரை குத்திவேர்
பறிய வன்சினை முறிய விண்டொடு பைந்த ருக்களை யுந்தியே
மறுகி வெள்ள மெடுத்த லைத்தர மன்ன வன்கரை தன்னினின்
றிறுதி யில்லவ னைத்தொ ழற்கிடை யூறி தென்றஞ ரெய்துவான். |
(இ
- ள்.) குறுகு முன்னர் - அரசன் அங்கு வருவதற்கு முன்னரே,
வையை வெள்ளம் எடுத்து - வையையாறு வெள்ளம் பெருகி, கொதித்து
அதிர்ந்து - கொந்தளித்து ஆரவாரித்து, அகன்கரை குத்தி - அகன்ற
கரையை அகழ்ந்து, விண் தொடு பைந் தருக்களை - வாளை யளாவிய
பசிய மரங்களை, வேர் பறிய வன்சினை முறிய உந்தி - வேர் அறவும்
வலிய கிளைகள் முறியவும் தள்ளி, மறுகி அலைத்தர - சுழன்று அலைக்க,
மன்னவன் கரைதன்னில் நின்று - சோழமன்னன் கரையின் கண்ணே நின்று
கொண்டு, இறுதி இல்லவனைத் தொழற்கு - அழிவில்லாத சோமசுந்தரக்
கடவுளை வணங்குதற்கு, இது இடையூறு என்று அஞர் எய்துவான். இஃது
இடையூறு யிராநின்றதென்று துன்புறுவானாயினன்.
வெள்ளமெடுத்து
- பெருக்கெடுத்து. அலைத்தர - அலைத்தலைச்
செய்ய; அலைவீச. (10)
|