வறந்த வாறுக டந்து வந்து வடக்கு வாயிறி றந்துபோய்
நிறைந்த காவல்க டந்து வீதிக ணீந்தி நேரியர் வேந்தனைச்
சிறந்த வாடக புனித பங்கய திப்பி யப்புன லாடுவித்
திறந்த வாதறை சாம கண்டர்த* மால யம்புகு வித்தரோ. |
(இ
- ள்.) வறந்த ஆறு கடந்து வந்து - (அங்ஙனந் திருவுளங்
கொண்ட வளவில்) வற்றிய ஆற்றினை (அச்சோழ மன்னனோடும்) கடந்து
வந்து, வடக்கு வாயில் திறந்து போய் - வடக்கு (மதில்) வாயிலைத் திறந்து
உள்ளே சென்று, நிறைந்த காவல் கடந்து வீதிகள் நீந்தி - (போர் வீரர்கள்)
நிறைந்த காவல்களைக் கடந்து பல வீதிகளையுந் தாண்டி, நேரியர்
வேந்தனை - சோழமன்னனை, சிறந்த புனித ஆடக பங்கயத் திப்பியப் புனல்
ஆடுவித்து - மேலான தூய பொற்றாமரையின் இனிய நீரில் மூழ்குவித்து,
அறம் தவாது அறை சாம கண்டர் - அறத்தினைப் பிறழாது கூறுஞ்
சாமகானஞ் செய்யும் கண்டத்தினையுடைய இறைவர், தம் ஆலயம் புகுவித்து
தமது திருக்கோயிலுட் புகச் செய்து.
ஆடக
புனித பங்கய திப்பியம் : வட சொற்களாகலின் இயல் பாயின.
திப்பியம் - இனிமை. அரோ : அசை. (13)
[அறுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
வெம்மைசெய்
கதிர்கால்+செம்பொன் விமானசே கரத்தின் மேய
தம்மையும் பணிவித் தெண்ணில் சராசர மனைத்து மீன்ற
அம்மையங் கயற்க ணாளா மணங்கையும் பணிவித் துள்ளுஞ்
செம்மைசெய் தின்ப வெள்ளத் தழுத்தினார் சித்த சாமி. |
(இ
- ள்.) சித்தசாமி - அச் சித்தமூர்த்தியாகிய பெருமான். வெம்மை
செய்கதிர்கால் செம்பொன் - வெப்பத்தைச் செய்கின்ற ஒளியினை வீசும்
சிவந்த பொன்னாலாகிய, விமான சேகரத்தில் மேய தம்மையும் பணி வித்து -
விமானங்களுள் முடிபோல்வதாகிய இந்திர விமானத்தி லெழுந்தருளிய
தம்மையும் வணங்கச் செய்து, எண் இல் சர அசரம் அனைத்தும் ஈன்ற -
அளவிறந்த சராசங்களனைத்தையும் பெற்றருளிய, அம்மை - தாயாகிய,
அங்கயற்கண்ணாளாம் அணங்கையும் பணிவித்து - அங்கயற்கண்ணியாகிய
அணங்கினையும் வணங்கச்செய்து, உள்ளம் செம்மை செய்து இன்ப
வெள்ளத்து அழுத்தினார் - உள்ளத்தைத் தூய்மை செய்து பேரின்பப்
பெருக்கில் ஆழச்செய்தருளினார்.
வெம்மை
- விருப்பமுமாம். உள்ளம் என்றது ஈண்டு உயிரை. செம்மை
செய்தல் - ஆணவமல வழுக்கைப்போக்கித் தூய்மை செய்தல். (14)
எண்ணிய வெண்ணி
யாங்கே யான்பெற முடித்தாய் போற்றி
பண்ணியன் மறைக டேறாப் பான்மொழி மணாள போற்றி
புண்ணியர் தமக்கு வேதப் பொருளுரை பொருளே போற்றி
விண்ணிழி விமான மேய சுந்தர விடங்க போற்றி. |
(பா
- ம்.) * காளகண்டர்த. +கதிர்காய்.
|