என்னும் வாதவூரடிகளின்
மணிவாசத்தாலும் அறிக. அவ்வுடலெல்லாம்
இருவினைப் பயன்களை நுகர்தற்பொருட்டன்றி, என் உயிர்க்கு உறுதி
பயத்தற்பொருட்டு வந்தனவல்ல என்றார். பாவ மறம், செவ்வெண்;
இரண்டென்னும் தொகை விகாரத்தாற் றொக்கது. (16)
இன்னன பலவு
மேத்தி யிறைஞ்சிப்பல் வரமும் வேண்டும்
மின்னகு வேலி னானை வேந்தநீ போந்த வண்ணந்
தென்னவ னறிந்தா லேதஞ் செய்யுமென் றார்த்தார்க் கண்ணி
மன்னனைச் சித்த சாமி யுத்தர வழிக்கொண் டேகா. |
(இ
- ள்.) இன்னன பலவும் ஏத்தி இறைஞ்சி - இவைபோன்ற
பலவுங்கூறத் துதித்து வணங்கி, பல் வரமும் வேண்டும் - பல வரங்களையும்
வேண்டுகின்ற, மின் நகு வேலினானை - மின்னலைப்போல விளங்கும்
வேற்படையினை யுடைய சோழனை, வேந்த - மன்னனே, நீ போந்த
வண்ணம் - நீ இங்கு வந்த செய்தியை, தென்னவன் அறிந்தால் ஏதம்
செய்யும் என்று - பாண்டியன் அறிவனேல் துன்பஞ் செய்வான் என்று கூறி,
ஆர் தார் கண்ணி மன்னனை - ஆத்திமாலையை யணிந்த அச் சோழ
மன்னனை, சித்தசாமி - சித்த மூர்த்திகள், உத்தர வழிக் கொண்டு ஏகா -
வடக்கு வழிக்கொண்டு சென்று.
மேல்
இரண்டு செய்யுளிலும் கூறியவற்றைச் சுட்டி இன்னன என்றார்.
மின்நகு - மின்னலை எள்ளி நகும் என்றுமாம். தாராகிய கண்ணி யென்க.
(17)
மண்ணினை
வளர்க்கும் வையை வடகரை யளவு நண்ணிப்
புண்ணிய நீற்றுக் காப்புப் புண்டர நுதலிற் சாத்தி
உண்ணிறை கருத்துக் கேற்ப வுறுதுணை யுனக்குண் டாகி
நண்ணுக வென்று பொன்னி நாடனை விடுத்து மீண்டு. |
(இ
- ள்.) மண்ணினை வளர்க்கும் வையை - நிலவுலகின்கண் உள்ள
உயிர்களை யூட்டி வளர்க்கும் வையை யாற்றின், வடகரை யளவும் நண்ணி -
வடகரை வரையுஞ்சென்று, புண்ணிய வடிவாயுள்ள திருநீற்றுக் காப்பினைத்
திரிபுண்டரமாக நெற்றியில் அணிவித்து, உள் நிறை கருத்துக்கு ஏற்ப - உனது
உள்ளத்தில் நிறைந்த கருத்துக்குப் பொருந்த, உறு துணை உனக்கு உண்டாகி
- மிக்க துணை உனக்கு உண்டாகப்பெற்று, நண்ணுக என்று -
செல்லக்கடவாய் என்று, பொன்னி நாடனை விடுத்து - காவிரி நாடனை
அனுப்பி, மீண்டு மீள.
திருநீறு
துன்பம் புகுதாமற் காப்பதாகலின் காப்பு எனப்பெறும்;
"ஆனநீற்றுக்
கவசம் அடையப் புகுமின்கள்" |
என்பது திருவாசகம்.
கருத்து - சிவநேயம். உறுதுணை - இறைவன்
றிருநாமம் முதலியன : மேல்,
|