II


256திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



"நாட்ட மூன்றவன் நாம வாள்கொடு நல்ல ருட்டுணை யாய்வழி
காட்ட அன்பெனு மிவுளி மேல்கொடு கங்குல்வாய் வருவான்"

என்று கூறினமையுங் காண்க. (18)

[கலிவிருத்தம்]
காப்புச் செய்து* கதவில் விடைக்குறி
யாப்புச் செய்தமைத் தீர்ஞ்சடைச் சித்தர்போய்த்
தூப்புக் கைவரை சூழ்வட மேருவிற்
கோப்புச் செய்தபொற் கோயிலின் மேயினார்.

     (இ - ள்.) காப்புச் செய்து - முன் திறந்த கதவினைச் சாத்தி, கதவில்
விடைக்குறி யாப்புச்செய்து அமைத்து - அதன்கண் இடப முத்திரையைப்
பொறித்தமைத்து, ஈர்ஞ்சடைச் சித்தர்போய் - குளிர்ந்த சடையையுடைய
சித்தசாமி யென்று, தூப்புக் கைவரை சூழ் - துளையையுடைய
துதிக்கையையுடைய யானைகள் சூழ்ந்து நின்று சுமக்கும், வடமேருவில்
கோப்புச் செய்த - வடக்கின்கண் உள்ள மேருமலையைப்போல் இயற்றிய,
பொன் கோயிலில் மேயினார் - அழகிய விமானத்தின்கண் எழுந்தருளினார்.

     தூம்பு, தூப்பு என வலித்தது; அடை. கைவரைசூழ் மேருவின் என
இல்பொருளுவமை யாக்கலுமாம். கோப்புச்செய்த - ஒழுங்குற இயற்றிய. (19)

கங்கு லின்கருங் கைகுறைப் பானெனச்
செங்கை நீட்டித் தினகரன் றோன்றலும்
எங்க ணாயக னிட்ட குறியறிந்
தங்கண் வாயி றிறப்பவ ரையுறா.

     (இ - ள்.) கங்குலின் கருகை குறைப்பான் என இரவாகிய அரக்கியின்
கருமையாகிய கையினைத் தறிப்பவன்போல, தினகரன் செங்கை நீட்டித்
தோன்றலும் - சூரியன் சிவந்த கிரணமாகிய கைகளை நீட்டித் தோன்றுதலும்,
அங்கண் வாயில் திறப்பவர் - அவ்விடத்து அவ்வாயிலைத் திறப்பவர்கள்,
எங்கள் நாயகன் இட்ட குறி அறிந்து ஐயுறா - எங்கள் பெருமானாகிய
சோமசுந்தரக்கடவுள் இட்ட விடைக் குறியினைக்கண்டு ஐயுற்று.

     கருங்கை செங்கை என்றது சொல் முரண். (20)

மற்றை வாயில்கண் மூன்றினும் வல்லைபோய்
உற்று நோக்கினர் தாநென்ன லொற்றிய
கொற்ற மீனக் குறிபிழை யாமைகண்
டெற்றி தாங்கொலென் றேந்தன்மு னெய்தினார்.

     (பா - ம்.) * காப்புச் செய்த.