கொளீஇ - மீண்டும்
அனுப்பிவிட்டுப் பின் தாளிறுக்கி, நந்தம் மால் விடை
பொறித்தேம் எனா - நமது பெரிய விடை யிலச்சினையை வைத்தோமென்று.
தாள்
- தாழக்கோல்; கொளீஇ - கொளுவி; செறத்து, நந்தம் : தம்
சாரியை. (26)
அருளி னானையற் தேற்றி யகன்றபின்
மருளி னீங்கி மலர்க்கண் விழித்தெழீஇ
வெருளி னான்வெயர்த் தான்விம்மி னான்பல
பொருளி னாற்றுதித் தான்குல பூடணன். |
(இ
- ள்.) அருளினான் - அருளையுடைய சோமசுந்தரக் கடவுள்,
ஐயம் தேற்றி அகன்ற பின் - ஐயத்தைத் தெளிவித்து நீங்கிய பின், குல
பூடணன் - குல பூடண பாண்டியன், மலர்க்கண் விழித்து எழீஇ -
மலர்போலும் கண்டுயி லுணர்ந்து எழுந்து, மருளின் நீங்கி - ஐயுறவினின்றும்
நீங்கி, வெருளினான் வெயர்த்தான் விம்மினான் - அஞ்சி வியர்த்து உடல்
பூரித்து, பல பொருளினால் துதித்தான் - பொருள் நிறைந்த பல பாக்களாலே
துதித்தான்.
அருளினான்
என்பதனை எச்சமாக்கி, அருள்புரிந்து என்றுரைத்தலுமாம்.
ஐயம் தேற்றி -ஐயத்தின் நீக்கித் தெளிவித்து. வெருளினான் முதலிய மூன்றும்
முற்றெச்சம். பொருள் - பொருளையுடைய பாடல்; சொற்களுமாம். (27)
வள்ள லன்புக் கெளிவந்த மாண்புகண்
டுள்ள வுள்ளநின் றூற்றெழு மற்புத
வெள்ள மும்பர மானந்த வெள்ளமுங்
கொள்ளை கொண்டுதன் கோமனை நீங்கினான். |
(இ
- ள்.) வள்ளல் - சோமசுந்தரக்கடவுள், அன்புக்கு எளிவந்த
மாண்பு கண்டு - அன்பினுக்கு எளியனாய் வெளிவந்த மாட்சியை நோக்கி,
உள்ள உள்ள நின்று ஊற்று எழும் அற்புத வெள்ளமும் - நினைக்குந்தோறும்
இடையறாது சுரந்து எழுகின்ற அதிசய வெள்ளமும், பரமானந்த வெள்ளமும்
கொள்ளை கொண்டு - சிவானந்த வெள்ளமும் தன்னைக் கொள்கை கொள்ள,
தன் கோமனை நீக்கினான் - தனது அரண்மனையை நீங்கினான்.
உள்ள
உள்ளத்தினின்று ஊற்றெழும் என உரைத்தலுமாம். அற்புதத்தைச்
சிவஞானம் என்றும், பரமானந்தத்தைச் சிவபோகம் என்றும் உரைப்பாரு முளர்.
அளவின்மை தோன்ற வெள்ளம் என்றார். கொண்டு என்பதைக்கொள்ள
வெனத் திரிக்க. (28)
அளிய றாமனத் தன்புடை யன்பருக்
கெளிய ராடலை யார்க்கும் வெளிப்படத்
தெளியு மாறு தெளிவித்துத் தன்னைப்போல்
விளிவிலா வின்ப வெள்ளத் தழுத்தினான். |
|