II


260திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) அளி அறா மனத்து அன்பு உடை அன்பருக்கு - உயிர்
களிடத்து அருள் நீங்காத மனத்தின்கண் அன்பு நிறைந்த அடியார் கட்கு,
எளியர் ஆடலை - எளியராயுள்ள சோமசுந்தரக்கடவுளின் திருவிளையாடலை,
யார்க்கும் வெளிப்படத் தெளியுமாறு தெளிவித்து - யாவருக்கும் புலப்படத்
தெளியும் வண்ணம் தெளிவித்து, தன்னைப் போல் விளைவு இலா இன்ப
வெள்ளத்து அழுத்தினான் - தன்னைப்போல யாவரும் அழியாத பேரின்ப
வெள்ளத்தில் முழுகும்படி அழுத்தினான்.

     (அளி - கனிவுமாம். தன்னைப்போல் முழுகுமாறு அழுத்தினான் என
விரிக்க. (29)

[கொச்சகக்கலிப்பா]
கோடாத செங்கோலும் வெண்குடையுங் கோமுடியும்
ஏடா ரலங்க லிராசேந் திரற்களித்துத்
தோடா ரிதழியான் றாட்கமலஞ் சூடிவான்
நாடா ளரசுரிமை பெற்றா னரபதியே.

     (இ - ள்.) நரபதி - குலபூடண பாண்டியன், கோடாத செங்கோலும்
வெண்குடையும் - கோணாத செங்கோலையும் வெண்கொற்றக் குடையையும்,
கோ முடியும் - அரசு முடியையும், ஏடு ஆர் அலங்கல் இராசேந்திரறகு
அளித்து - இதழ்கள் நிறைந்த மலர் மாலையை யணிந்த இராசேந்திர
பாண்டியனுக்குக் கொடுத்து, தோடு ஆர் இதழியான் - இதழ்கள் நிறைந்த
கொன்றை மாலையையுடைய இறைவனது, தாள கமலம் சூடி - திருவடித்
தாமரையைத் (தனது முடியில்) அணிந்து, வான் நாடு ஆள் அரசு உரிமை
பெற்றான் - வான நாட்டை ஆளும் அரசுரிமையைப் பெற்றனன்.

     (கோடாத என வந்தமையால் செங்கோல் என்பது கோல் என்னுந்
துணையாய் நின்றது; என்றும் கோடுதலில்லாத என்றுமாம். செங்கோல்
வெண்குடை என்பன சொல் முரண். இராசேந்திரனை முடிசூட்டி என்பார்
‘இராசேந்திரற் களித்து,’ என்றார். (30)

                     ஆகச் செய்யுள் - 1818,