முப்பத்தைந்தாவது
தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம்
|
[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
|
சம்பு
மதுரைப் பரனிரவு தனியே வந்து தனைப்பணிந்த
வெம்பு கதிரோன் மருமானை விடுத்து மீண்டு தாழிறுக்கி
அம்பொற் கதவின் விடைபொறித்த தறைந்துந் தென்ன னடுபடைக்கு
வம்பு மலர்தோய் புனற்பந்தர் வைத்துக் காத்த வகைசொல்வாம். |
(இ
- ள்.) சம்பு மதுரைப் பரன் - சம்புவாகிய மதுரைப் சோமசுந்தரக்
கடவுள், இரவு தனியே வந்து தனைப் பணிந்த - இரவில் ஒருவனாய் வந்து
தன்னை வணங்கிய, வெம்பு கதிரோன் மருமானை - வெப்பமாகிய
கிரணத்தையுடைய சூரியன் மரபினனாகிய சோழனை, விடுத்து - அனுப்பி,
மீண்டு தாழ் இறுக்கி - திருப்பித் தாழிட்டு, அம்பொன் கதவின் விடை
யிலச்சினையிட்ட திருவிளையாடலைக் கூறினோம்; தென்னன் அடுபடைக்கு -
பாண்டியனது போர் செய்யும் படைகளுக்கு, வம்பு மலர் தோய் புனல் பந்தர்
வைத்துக் காத்த வகை சொல்வாம் - மணத்தினையுடைய மலர் தோய்ந்த
தண்ணீர்ப் பந்தர் வைத்துக் காத்தருளிய திருவிளையாடலை (இனிக்)
கூறுவாம்.
அறைந்தும்;
இறந்தகாலத் தனித் தன்மைப் பன்மைமுற்று. தண்ணீர்க்கு
மலரால் மண மூட்டுதலை,
"ஒண்ணிறப் பாதிரிப்பூச்
சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு" |
என்னும்
நாலடியார்ச் செய்யுளா னறிக. (1)
தென்ன னரச
புரந்தரன்கோல் செலுத்து நாளிற் காடெறிந்த
மன்னன் பின்னர் வெளிப்படையாய்ப் போந்து போந்து மதுரேசன்
பொன்னங் கமலத் தாள்வணங்கிப் போவாள் முன்னிப் பொரும்பொருநைக்
கன்னி நாடன் கேண்மைபெற விடுத்தான் வரிசைக் கையுறையே. |
(இ
- ள்.) தென்னன் அரச புரந்தரன் கோல் செலுத்து நாளில் -
பாண்டியனாகிய இராசேந்திரன் செங்கோல் செலுத்தும் நாளில், காடு எறிந்த
மன்னன் - காடுவெட்டிய சோழன், பின்னர் வெளிப்படையாய்ப் போந்து
போந்து - பின் யாவருமறிய வெளிப்படையாய் வந்துவந்து மதுரேசன் பொன்
அம் கமலத்தாள் வணங்கிப் போவான் கருதி - சோம சுந்தரக்கடவுளின்
அழகிய பொற்றாமரை மலர்போன்ற திருவடிகளை வணங்கிப் போகக்
கருதி, பொரும் பொருநைக் கன்னி நாடன் - கரையை மோதும்
பொருநையாற்றினை
|