II


262திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



யுடைய கன்னி நாடனாகிய இராசேந்திர பாண்டியனது, கேண்மை பெற -
நட்பைப் பெறுதற்கு வரிசைக் கையுறை விடுத்தான் - வரிசையாகிய
கையுறையை அனுப்பினான் :

     இந்திரனுக்குப் புரந்தரன் என்பது ஒரு பெயராகலின் இராசேந்திரனை
அரசபுரந்தரன் என்றார். போவான் : வினையெச்சம். வரிசை, கையுறை
என்பன காணிக்கை என்னும் பொருளன. (2)

பொன்னி நாடன் வரவிடுத்த பொலம்பூ ணாடை முதற்பிறவுங்
கன்னி நாடன் கைகவர்ந்து தானுங் கலக்குந் தொடர்பினால்
உன்னி வேறு கையுறையுய்த் துறவு செய்ய வுவப்பெய்திச்
சென்னி காதன் மகட்கொடுப்ப னிசைந்தா னந்தச் செழியற்கு.

     (இ - ள்.) பொன்னி நாடன் வரவிடுத்த - காவிரி நாடனாகிய சோழ
மன்னன் வரவிடுத்த, பொலம் பூண் ஆடை முதல் பிறவும் - பொன்னாலாகிய
அணிகலன்களையும் பொன்னாடை முதலாக வுள்ள பிற பொருளையும்,
கன்னிநாடன் கைகவர்ந்து - கன்னிநாடனாகிய பாண்டியன் ஏற்றுக்கொண்டு,
தானும் கலக்கும் தொடர்பினால் கையுறை உய்த்து உறவுசெய்ய - வேறு
காணிக்கை விடுத்து நட்புச் செய்ய, சென்னி - சோழன், உவப்பு எய்தி,
மகிழ்ச்சியுற்று, அந்தச் செழியற்கு - அந்த இராசேந்திர பாண்டியனுக்கு, காதல்
மகள் கொடுப்பான் இசைந்தான் - தன் அன்புள்ள மகளைக் கொடுத்தற்கு
மனமிசைந்தான்.

     பொலம், பொன் என்பதன் றிரிபு. கலக்குந் தொடர்பு - ஒருவர்
ஒருவரோடு அளவளாவும் தொடர்பு. தானும் பேறு கையுறையுய்த்து என்க. (3)

செழியன் றனக்கு வரையறுத்த செய்தி கேட்டுச் செம்பியர்கோன்
கழியன் புடைய குலமகளைத் தான்போய்க் கொள்வான் கருதிமதி
வழிவந் தவற்குத் தம்பியென வந்த வரச சிங்கமெனும்
பழியஞ் சாதான் வஞ்சித்துப் பழனக் காஞ்சிப் பதிபுகுவான்.

     (இ - ள்.) செழியன் தனக்கு வரையறுத்த செய்தி கேட்டு - இராசேந்திர பாண்டியனுக்கு உறுதி செய்த செய்தியினைக் கேட்டு, செம்பியர்கோன் கழி
அன்பு உடைய குலமகளை - சோழ மன்னனது மிக்க அன்புடைய சிறந்த
புதல்வியை, தான் போய்க் கொள்வான் கருதி - தான் போய் மணந்து
கொள்ளக் கருதி, மதி வழிவந்த அவற்குத் தம்பி என வந்த - சந்திரன்
மரபில் வந்தவனாகிய அவனுக்குத் தம்பி என்று சொல்லத் தோன்றிய,
அரசசிங்கம் எனும் பழி அஞ்சாதான் - அரச சிங்கனென்னும்
பெயரினையுடைய பழியினை அஞ்சாத ஒருவன், வஞ்சித்துப் பழனக்
காஞ்சிப்பதி புகுவான் - (முன்னவனை) வஞ்சித்து வயல்சூழ்ந்த காஞ்சிநகரிற்
செல்வானாயினன்.

     கொள்பான் : வினையெச்சம். வந்த அவற்கு என்பது வந்தவற்கு எனத்
தொகுத்தலாயிற்று. தம்பி யெனற்குத் தகாதவன் என்பார் ‘தம்பி யென வந்த’