II


264திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



திரண்ட திர்ந்தெ ழுந்து வந்த சென்னி சேனை தன்னகர்க்
கிரண்டு யோச னைப்பு றத்தி றுக்கு முன்ன ரொற்றால்
தெருண்டு தென்னன் மாட நீடு கூடன் மேய சிவனதாள்
சரண்பு குந்து வேண்டு கென்று சார்ந்து தாழ்ந்து கூறுவான்.

     (இ - ள்.) எழுந்து திரண்டு அதிர்ந்து வந்த சென்னி சேனை -
(போர்குறித்து) எழுந்து நெருங்கி முழங்கி வந்த சோழனுடைய அப் படைகள்,
தன் நகர்க்கு இரண்டு யோசனைப் புறத்து இறுக்கும் முன்னர் - தனது
நகருக்கு இரண்டு யோசனையில் வந்து தங்குதற்கு முன்னரே, ஒற்றரால்
தென்னன் தெருண்டு - ஒற்றர்களாலே பாண்டியன் அறிந்து கொண்டு, மாடம்
நீடு கூடல்மேய சிவனதாள் - மாடங்கள் நிறைந்த கூடலின்கண் எழுந்தருளிய
சோமசுந்தரக் கடவுளின் திருவடிகளில், சரண்புகுந்து வேண்டுகு என்று -
அடைக்கலம் புகுந்து குரையிரப்பேனென்று கருதி, சார்ந்து தாழ்ந்து கூறுவான்
- சென்று வணங்கிச் சொல்லுவான்.

     சிவன, அகரம் ஆறனுருபு.

"சிவன தாட் சிந்தியாப் பேதைமார் போல"

என்பது தேவாரம். வேண்டுகு - வேண்டுவேன்; கு : தன்மை யொருமை
யெதிர்கால விகுதி. (7)

அன்று பாதி யிரவில் வந்து னடிப ணிந்து தமியனாய்ச்
சென்ற சென்னி யென்னு நின்ன திருவ டிக்க ணன்பினான்
இன்று மந்நி லைய னா*யெ னக்கு வேண்டு வனவிடுத்
தொன்று கேண்மை புரிகு வானுளத்தி லொன்றை யுன்னினான்.

     (இ - ள்.) அன்று பாதி இரவில் தமியனாய் வந்து - அன்று அரை
யிரவில் ஒருவனாய் வந்து, உன் அடி பணிந்து சென்ற - நினது திருவடியை
வணங்கிப்போன, சென்னி என்னும் நின்ன திருவடிக்கண் அன்பினான் -
காடு வெட்டிய சோழனென்னும் உன் திருவடியின்கண் அன்புடையவன்,
இன்றும் அந்நிலையன் ஆய் - இப்பொழுதும் அந் நிலையை
யுடையவனாதற்கு, எனக்கு வேண்டுவன விடுத்து - எனக்கு வேண்டும்
பொருள்களை அனுப்பி, ஒன்று கேண்மை புரிகுவான் - கலந்த நட்பினைப்
பெற விரும்பியவன், உளத்தில் ஒன்றை உன்னினான் - மனத்தின்கண்
மற்றொன்றைக் கருதினான்.

     நின்ன, அகரம் ஆறனுருபு. நிலையனாய், நிலையனாக. ஒன்று -
அதற்கு மாறாய தொன்று. (8)

அறத்தி னுக்கு ளாகி யன்று நின்ற நீய வன்செயும்
மறத்தி னுக்கு ளாகி யின்று வன்மை செய்வ தேயறப்
புறத்தி னார்பு ரம்பொ டித்த புண்ணி யாவெ னக்கரைந்
துறைத்து வேண்டி னான வேலை யும்பர் நாத னருளினால்.

     (பா - ம்.) * என்று மந்நிலையனாய்.