II


தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம்265



     (இ - ள்.) அறப்புறத்தினார் புரம்பொடித்த புண்ணியா - அறத்திற்கு
வேறாகிய மறத்தினையுடையார் முப்புரங்களையும் நீறாக்கிய புண்ணியனே,
அன்று அறத்திற்கு உள்ளாகி நின்ற நீ - அவன் வந்து வணங்கிய
அப்பொழுது அறத்திற்கு உடன்பட்டு நின்ற நீ, இன்று அவன் செய்யும்
மறத்தினுக்கு உள்ளாகி வன்மை செய்வதே எனக் கரைந்து - இன்று அவன்
செய்யும் தறுகண்மைக்கும் உடன்பட்டு நின்று கொடுமை செய்வது நன்றோ
எனக் கூறி, உறைத்து வேண்டினான் - நாதன் அருளினால் - தேவர்க்கு
நாயகனாகிய சோமசுந்தரக்கடவுளின் திருவருளால்.

     செய்வதே - செய்வது அழகிதோ என்றபடி - அறப்புறம் - பாவம்;
"அறங்கடை" என்புழிப்போல. தீயோரை யொறுத்தல் அறமாகலின் ‘புரம்
பொடித்த புண்ணியன்’ என்றார். உறைத்து - அழுத்தமுற்று; "திருத்தொண்டி
நுறைப்பாலே" என்பது காண்க. உள்ளாகி, அவ்வேலை என்பன ளகர வகரம்
தொக்கு நின்றன, அறப் புறத்தினார் புரம் பொடித்த என்னும் அடை இன்றும்
அறத்திற்கு மாறாகியவனை அழிக்கற்பாலை என்னும் கருத்துடன் கூடி
யிருத்தலால் இது கருத்துடை யடையணி. (9)

மெய்து றந்த வாய்மை யொன்று விண்ணி னின்று மண்ணலே
ஐது நுங்கள் சேனை யோடு* மாக வத்து நாளைநீ
எய்தி வந்த தெவ்வ ரோடெ திர்ந்து ருத்து நின்றுபோர்
செய்தி வென்றி நின்ன தாதல் செய்து மென்றே ழுந்ததால்.

     (இ - ள்.) விண்ணின் நின்றும் மெய்துறந்த வாய்மை ஒன்று -
வானினின்றும் அசரீரி மொழி ஒன்று, அண்ணலே - வேந்தனேஇ நாளை நீ
நுங்கள் ஐது சேனையோடும் ஆகவத்து எய்தி - நாளை நீ நும் அற்பமாகிய
சேனையோடும் போர்க்களஞ் சென்று, வந்த தெவ்வரோடு எதிர்ந்து உருத்து
நின்று போர் செய்தி - வந்த பகைவரோடு எதிர்த்துச் சினந்து நின்று போர்
புரிவாயாக; வென்றி நின்னது ஆதல் செய்தும் - வெற்றி நின்னுடையதாகச்
செய்வோம்; என்று எழுந்தது - என்று உண்டாயது.

     மெய் துறந்த வாய்மை - அசரீரி வாக்கு; அசரீரி - சரீரம் இல்லது.
வாய்மை ஈண்டு மொழியென்னும் பொருட்டு. ஐது - நுண்ணியது; அழகியதாக
என்றுமாம். நுங்கள் நீ எனப் பன்மை யொருமை மயங்கிற்று. ஆகவம் -
போர்க்களம். ஆல் : அசை. (10)

காய வாணி செவிநு ழைந்த காலை வேந்த ரிந்திரன்
நாய னார டிக்கணே நயந்த வன்பு முவகையும்
ஆய வேலை வீழந்து தாழ்ந்த கன்று தன்னி ருக்கைபோய்
மேயி னானி மிர்ந்த கங்குல் விடியு மெல்லை நோக்குவான்.

     (இ - ள்.) காயவாணி செவி நுழைந்த காலை - ஆகாய வாக்குச்
செவியிற் புகுந்த பொழுது, வேந்தர் இந்திரன் - இராசேந்திர பாண்டியன்,


     (பா - ம்.) * சேனை யேனும்.