நாயனார் அடிக்கண்
நயந்த - இறைவரது திருவடிக்கண் விரும்பிய, அன்பும்
உவகையும் ஆயவேலை வீழ்ந்து தாழ்ந்து அகன்று - அன்பும்
மகிழ்ச்சியுமாகிய கடலுள் வீழ்ந்து வணங்கி அங்கு நின்றும் நீங்கி, தன்
இருக்கைபோய் மேயினான் - தனது இருப்பிடஞ் சென்று அடைந்து, நிமிர்ந்த
கங்குல் விடியும் எல்லை நோக்குவான் - மிகுந்த இரவு விடியுமெல்லையை
நோக்குவானாயினன்.
காயம்
- ஆகாயம்; முதற்குறை; இது காயமென்றே தொல்காப்பியம்
முதலியவற்றில் வழங்குவது ஆராய்தற் குரியது. வாணி - வாக்கு.
இராசேந்திரனை முன்பு அரச புரந்தரன் என்றதுபோல் ஈண்டு வேந்த
ரிந்திரன் என்றார். நாயன் - தலைவன். விடியலை எதிர் நோக்கினா னாகலின்
இரவு மிக்குத் தோன்றிற் றென்பார் நிமிர்ந்த கங்குல் என்றார். (11)
கழித்த கங்கு லிறவி சும்பு கண்வி ழிக்கு முன்னரே
விழித்தெ ழுந்து சந்தி யாதி வினைமு டித்து வானநீர்
சுழித்து லம்பு வேணி யண்ண றூய பூசை செய்தெழீஇத்
தெழித்தெ ழுந்த சேனை யோடு செருநி லத்தை நண்ணினான். |
(இ
- ள்.) கழித்த கங்குல் இற - மிக்க இராப் பொழுது ஒழிய, விசும்பு
கண்விழிக்கு முன்னரே - ஆகாயம் கண் விழிக்கு முன்னரே, விழித்து
எழுந்து சந்தி ஆதிவினை முடித்து - விழித்தெழுந்து சந்தி முதலிய
வினைகளை முடித்துக்கொண்டு, வான நீர் சுழித்து அலம்பு வேணி அண்ணல்
- கங்கைநீர் சுழித்து ஒலிக்கும் முடியினையுடைய இறைவனது, பூசை செய்து -
பூசையை முடித்து, எழீஇ - எழுந்து, தெழத்து எழுந்து சேனையோடு செரு
நிலத்தை நண்ணினான் - ஆரவாரித்தெழுத் படையுடன் போர்க்களத்தை
அடைந்தான்.
கழிந்த
என்பது கழித்த என வலித்தலாயிற்று. ஞாயிற்றை விசும்பிற்குக்
கண்ணாக்கி, ஞாயிறு தோன்றுதலை விசும்பு கண்விழித்தல் என்றார்;
"வான்கண் விழியா
வைகறை யாமத்து" |
என்றார் இளங்கோவடிகளும்.
காலை மாலையாகிய சந்திகளிற் செய்யப்படும்
நாட்கடன் சந்தி எனப்படும். தெழித்தல் - உரப்புதல். (12)
அலைசி றந்த சலதி மீதொ ராறு செல்லு மாறுபோல்
மலைசி றந்த நேரி வெற்பன் மள்ளர் சேனை வெள்ளமேற்
கலைசி றந்த மதிநி றைந்த கன்னி நாடு காவலான்
சிலைசி றந்த சிறிய சேனை சென்ற லைத்து நின்றதே. |
(இ
- ள்.) அலை சிறந்த சலதி மீது ஒரு ஆறு செல்லு மாறுபோல் -
அலைமிக்க கடலின்மேல் ஒரு நதி சென்று பாயுமாறுபோல, மலைசிறந்த நேரி
வெற்பன் - மலைகளிற் சிறந்த நேரி மலையினையுடைய சோழனது மள்ளர்
சேனை வெள்ளமேல் - படை வீரராகிய கடலின்மேல், கலை சிறந்த மதி
நிறைந்த கன்னி நாடு காவலான் - கலைப்பயிற்சியாற் சிறந்த அறிவு நிறைந்த
|