அம் இரண்டும் சாரியையுமாம்.
கருவி - சேனை - வேணியையுடை
யவனாகிய விடையவன் என்க. அனந்தம் - முடிவின்மை. உருத்து -
உருக்கொண்டு : தன், சாரியை, ஆல் : அசை. (15)
தேரி னோதை
கந்துகஞ் சிரிக்கு மோதை சொரிமதக்
காரி னோதை பேரியங் கறங்கு மோதை மறவர்தம்
போரி னோதை வீரர்தோள் புடைக்கு மோதை யோடுமுந்
நீரி னோதை யொன்றெனக் கலந்தொ டுங்கி* நின்றதே. |
(இ
- ள்.) தேரின் ஓதை - தேர்செல்லும் ஒலியும், கந்துகம் சிரிக்கும்
ஓதை - குதிரைகள் கனைக்கு மொலியும், சொரிமதக் காரின் ஓதை -
மதஞ்சொரிகின்ற யானைகளின் பிளிறொலியும், பேர் இயம் கறங்கும் ஓதை -
பெரிய வாத்தியங்கள் ஒலிக்கு மொலியும், மறவர்தம் போரின் ஓதை -
வீரர்கள் புரியும் போரினொலியும், வீரர் தோள்புடைக்கும் ஓதையோடு -
அவர்கள் தோளினைத் தட்டு மொலியுமாகிய இவற்றோடு, முந்நீரின் ஓதை
ஒன்று எனக்கலந்து ஒடுங்கி நின்றது - கடலினொலி ஒன்றென்று கூறுமாறு
அஃது அவ்வொலிகளிற் கலந்து அடங்கிநின்றது.
சொரிமதம்
என்னும் அடையால் கார் யானையாயிற்று. தம் : சாரியை.
தேரொலி முதலியவற்றோடு கடலொலியும் ஒன்றென்னும்படி அது அவற்றில்
ஒடுங்கியது என்றது தேரொல முதலிய ஒவ்வொன்றும் கடலொலிபோல்
விஞ்சியிருந்தமை கூறியவாறாயிற்று. ஒன்றென என்பதற்கு அற்பமென்ன
என்றுரைத்தலுமாம். (16)
சிலைப யின்ற வீரரோடு சிலைப யின்ற வீரரே
கலைப யின்ற வாளரோடு கலைப யின்ற வாளரே
கொலைப யின்ற வேலரொடு கொலைப யின்ற வேலரே
மலைப யின்ற மல்லரோடு மலைப யின்ற மல்லரே. |
(இ
- ள்.) சிலை பயின்ற வீரரோடு சிலை பயின்ற வீரர் - விற்றொழில்
பயின்ற வீரர்களோடு விற்றொழில் பயின்ற வீரர்களும், கலைபயின்ற
வாள்வீரரோடு கலைபயின்ற வாளர் - படைக்கல நூன்முறையிற் பயின்ற
வாள்வீரரோடு அங்ஙனம் பயின்ற வாள்வீரர்களும, கொலை பயின்ற
வேலரொடு கொலை பயன்ற வேலர் - கொல்லுதலைப் பழகிய வேல்
வீரரோடு வேல் வீரர்களும், மலை பயின்ற மல்லரோடு மலை பயின்ற மல்லரே
- மற்போரிற் பழகிய மல்லரோடு மற்போாற் பழகிய மல்லர்களும்.
கலை
ஒளியுமாம். மல் என்பது ஐ என்னும் பகுதிப் பொருள் விகுதி
பெற்று மலை யென நின்ற தென்க; இரண்டனுருபாயின் மலைப்பயின்ற என
ஒற்று இரட்டுதல் வேண்டும்; மலையை யொத்த என்றலுமாம். வீரரே
முதலியன வருஞ்செய்யுளில் மலைவர் என்பது கொண்டு முடியும். (17)
(பா
- ம்.) * ஒடுங்க.
|