II


தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம்269



கரியு கைத்த பாகரோடு கரியு கைத்த பாகரே
பரியு கைத்த மறவரோடு பரியு கைத்த மறவரே
கிரியு கைத்த* வலவரோடு கிரியு கைத்த வலவரே
எரியு கைத்தெ திர்ந்தகா லெனக்க லந்து மலைவரால்.

     (இ - ள்.) கரி உகைத்த பாசரோடு கரி உகைத்த பாகரே -
யானையைச் செலுத்திய வீரரோடு யானையைச் செலுத்திய வீரரும், பரி
உகைத்த மறவரோடு பரி உகைத்த மறவரே - குதிரையைச் செலுத்திய
வீரரோடு குதிரையைச் செலுத்திய வீரரும், கிரி உகைத்த வலவ ரோடு
கிரி உகைத்த வலவரே - மலை போலும் தேரைச் செலுத்திய வீரரோடு
தேரைச் செலுத்திய - வீரரும், எரி உகைத்து எதிர்ந்து கால் எனக் கலந்து
மலைவர் - நெருப்பினை மூட்டி எதிர்த்த காற்றைப்போல எதிர்ந்து போர்
செய்வாராயினர்.

     யானைவிரரும் தேர்வீரரும் அவற்றைச் செலுத்துதல் நோக்கி முறையே
பாகர் எனவும் வலவர் எனவும் கூறப்பட்டனர். கிரி. உவமையாகு பெயராய்த்
தேரினைக் குறித்தது; திகிரி என்பது முதற் குறையாயிற்றென்பாரு முளர்.
வடவைத்தீயை மூட்டி யெழுந்த ஊழிக்காற்றுப்போல் எனலுமாம். தீயுங்
காற்றுங் கூடி எதிர்ந்து பொருதாற்போல வென்க. ஆல் : அசை. (18)

விடுக்கும் வாளி யெதிர்பிழைப்பர் வெய்ய வாளி யெய்துபின்
தொடுக்கும் வாளி வில்லொடுந் துணிப்பர் பின்க ணிப்பற
மடுக்கும் வாளி மார்புதைப்ப வாங்கி மற்றவ் வாளி+கொண்
டடுக்கு மேவ லாரையெய் தடர்ப்பர் கிள்ளி மள்ளரே.

     (இ - ள்.) கிள்ளி மள்ளர் - சோழனுடைய சேனை வீரர், விடுக்கும்
வாளி எதிர் பிழைப்பர் - பாண்டியன் வீரர் விடும் கணைகளை எதிர் நின்று
தப்புவர்; வெய்ய வாளி எய்து - கொடிய அம்புகளைத் தாம் விடுத்து, பின்
தொடுக்கும் வாளி வில்லொடும் துணிப்பர் - பின் அவர்கள் தொடுக்கும்
அம்புகளை வில்லோடும் துண்டு படுத்துவர்; பின் கணிப்பு அற மடுக்கும்
வாளி மார்புதைப்ப - பின் அவர்கள் அளவின்றிச் செலுத்தும் அம்புகள் தம்
மார்பிற்றைக்க, வாங்கி - அவற்றைப் பிடுங்கி, அவ்வாளி கொண்டு -
அவ்வம்புகளால், அடுக்கும் மேவலாரை எய்து அடர்ப்பர் - நெருங்கும்
பகைவரை எய்து கொல்லுவர்.

     எதிர் பிழைத்தல் - அவை தம்மீது படாது தப்பச்செய்தல். மற்று :
அசை; வினைமாற்றுமாம். வாங்கி என்பதற்கு ஏற்று என்றுரைத் செலுத்தினர்
என்பது நூழிலாட்டு எனப்படும்;

"களங்கழுமிய படையிரிய
உளங்கழிந்தவேல் பறித்தோச்சின்று"

என்பது அதன் இலக்கணம்.


     (பா - ம்.) * தேர்க்கிரியுகைத்த. +மற்றை வாளி.