II


270திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல பறியா நகும்"

என வள்ளுவர் கூறுதலுங் காண்க. 919)

சோனை மாரி யிற்சரஞ் சொரிந்து நின்று துள்ளுவார்
ஆன வாளி யெதிர்பிழைத் தொதுங்கி நின்ற ழற்சரங்
கூனல் வாளி சிலையிறத் தொடுத்தெ றிந்து கூவுவா
மீன கேத னத்துவேந்தன் வீரர் சென்னி வீரர்மேல்.

     (இ - ள்.) மீன கேதனத்து வேந்தன் வீரர் - கயற்கொடியினை
யுயர்த்திய பாண்டியன் படை வீரர்கள், சென்னி வீரர்மேல் - சோழன்
படை வீரர்களின்மேல், சோனை மாரியில் சரம் சொரிந்து - சோனை
மழையைப்போல வாளிகளைப் பொழிந்து, நின்று துள்ளுவார் - களித்து
நின்று துள்ளுவார்கள்; ஆனவாளி எதிர் பிழைத்து ஒதுங்கி நின்று -
அங்ஙனமே பகைவர் சொரிந்த அம்புகளுக்கு எதிர்தப்பி ஒதுங்கி நின்று,
வாளி கூனல் சிலை இற - அவர்களுடைய அம்பும் வளைந்த வில்லும்
முறியுமாறு, அழல் சரம் தொடுத்து எறிந்து கூவுவார். கொடிய கணைகளைத்
தொடுத்து விடுத்து வீர முழக்கஞ் செய்வார்கள்.

     சோனைமாரி - விடாது பெய்யும் மழை. எறிந்து - துணித்து
என்றுமாம். (20)

தறிந்த தாட கர்ந்தசென்னி தரையு ருண்ட வரையெனச்
செறிந்த தோள்ச ரிந்ததேர் சிதைந்த பல்ப டைக்கலம்
முறிந்த யானை கையிறா முழங்கி வீழ்ந்த செம்புனல்
பறிந்த பாறு பாரிடங்கள் பைத்த கூளி மொய்ததவே.

     (இ - ள்.) தாள் தறிந்த - (படைவீரர்களின்) கால்கள் முறிந்தன;
தகர்ந்த சென்னி தரை உருண்ட - அறுபட்ட தலைகள் நிலத்தில்
உருண்டன; உரை எனச்செறிந்த தோற் சரிந்த - மலைபோலத் திரண்ட
தோற்கள் துண்டாகிச் சரிந்தன; தேர் சிதைந்த - தேர்கள் அழிந்தன;
பல்படைக்கலம் முறிந்த - பர படைக்கலங்களும் முறிந்தன; யானை
கைஇறா முழங்கி வீழ்ந்த - யானைகள் துதிக்கை அறுபடுதலால் அலறி
வீழ்ந்தன; செம்புனல் பறிந்த - குருதிவெள்ளம் ஓடின; பாறு பாரிடங்கள்
பைத்தகூளி மொய்த்த - பருந்துகளும் பூதங்களும் கரிய பேய்களும்
(போர்க்களமெங்கும்) நெருங்கின.

     தறிந்த முதலியன அன்பெறாத பலவின்பால் முற்றுக்கள். இறா :
செய்யா என்னும் எச்சம். பறிதல் - செல்லுதல். பைத்த - பரந்த
என்றுமாம். (21)

மடலி னீடு தாரலங்கன் மன்னர் சேனை யின்னவா
றுடலி னீழ லடியகத் தொடுங்க வும்ப ருச்சியிற்
கடலி னீடு கதிர்பரப்பு கடவு ளெய்து மளவுநின்
றடலி னீடி யிடைவிடாம லமரு ழந்த தாலரோ.*

     (பா - ம்.) * உழந்தவாலரோ.