II


272திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



கண்பிளந்து - கண் கூசச்செய்து. வீசுகானல் - வீசுதலாலாகிய கானல்.
பேய்த்தேரைக் கானல் என்பது பிற்கால வழக்கு. (24)

[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
ஆயிடை யலகைத் தேரு மடைந்தவர் வெயர்வு மன்றித்
தூயநீர் வறந்த வந்தச் சுடுபுலந் தோய்ந்த காலும்
மீயுயர் மதிநி லாவும் வெய்யவாய்ச் சுடுநல் லோருந்
தீயவர் தம்மைச் சேர்ந்தாற் றீயவ ராவ ரன்றோ.

     (இ - ள்.) ஆயிடை - அவ்விடத்து, அலகைத்தேரும் - பேய்த்
தேரும், அடைந்தவர் வெயர்வும் அன்றி - அங்குச் சென்றவர்களின் வியர்
நீருமல்லாமல், தூயநீர் வறந்த - நல்ல நீர்கள் சிறிதுமின்றி வற்றின; அந்த
சுடுபுலம் தோய்ந்த காலும் - அந்த வெப்பு நிலத்திற் படிந்துவரும் காற்றும்,
மீ உயர்மதி நிலாவும் - வானின்கண் உயர்ந்து விளங்கும் திங்களின் ஒளியும்,
வெய்யவாய்ச் சுடும் - கொடியனவாய்ச் சுடா நிற்கும்; நல்லோரும் -
நல்லவரும், தீயவர் தம்மைச் சேர்ந்தால் - தீயவரைக் கூடினால், தீயவர்
ஆவர் அன்றோ தீயவராவரல்லவா?

     அலகைத்தேர் நீர்போலும் தோற்றமுடைத் தாகலின் ‘அலகைத் தேரும்
வெயர்வும் என்றார், கால் ஈண்டுக் காற்று, தட்பமுடைய காற்றும் மதியின்
கிரணமும் வெப்பமுடைய நிலத்தைச் சார்ந்து வெய்யவாய்ச் சுடும் என்ற
பொருளைச் சாதித்தற்கு நல்லோரும் தீயவரைச் சேர்ந்தால் தீயவராவர்
என்னும் வேறு பொருளைக் கூறினமையால் வேற்றுப் பொருள் வைப்பணி.
(25)

விளைமத வூற்று மாறி வெகுளியுஞ் செருக்கு மாறித்
துளையுடைக் கைம்மான் றூங்கு நடைய வாய்ச் சாம்பிச் சோர்ந்த
உளர்தரு மூழிக் காலி னோடுவாம் புரவி யெய்த்துத்
தளர்நடை யுடைய வாகித் தைவரு தென்றல் போன்ற.

     (இ - ள்.) துளைஉடைக, கைமான் - துளை பொருந்திய
கையையுடைய யானைகள், விளைமத ஊற்று மாறி - இடையறாதொழுகும்
மதநீர் சுரத்தல் மாறி, வெகுளியும் செருக்கும் மாறி - சினமும் செருக்கும்
ஓழிந்து, தூங்கு நடையவாய் சாம்பிச் சோர்ந்த - மந்த நடையையுடைய
ஊழிக்காற்றைப் போல ஓடும், வாம்புரவி - தாவுங் குதிரைகள், எய்த்து -
இளைத்து, தளர்நடை உடையவாகி - தளர்ந்த நடையினை உடையனவாய்,
தைவரு தென்றல் போன்ற - தவழ்ந்து செல்லுந் தென்றலை ஒத்தன.

     விளைதல் - உண்டாதல். உளர்தல் - அசைதல். காலின், இன் :
ஒப்புப் பொருட்டு. சோர்ந்த, போன்ற என்பன அன்பெறாத பலவின்
பால் முற்றுக்கள்.(26) .

கானலந் தேர்மேற் சூறைக் காலெனும் பாகன் றூண்ட
வேனில்வேந் தேறிச் சீறி வெப்பமாம் படைகள் வீச
மாநிலங் காவல் பூண்ட மன்னவ ரிருவர்* தங்கள்
தானையு முடைந்து தண்ணீர் நசைசுடச் சாம்பிற் றன்றே

     (பா - ம்.) * மானவரிருவர்.