நின்ற கல் உடல்
நிழல் சேர்வாரும் - வீர சுவர்க்கஞ் சென்ற வீரர்கள் நின்ற
கல்லாகிய உடம்பின் நிழலை அடைவாரும், ஆயினார் களமர் எல்லாம் -
ஆயினர் வீர ரனைவரும்.
அல்
இருள் - நள்ளிரவின் இருள். வட்டத்தோல் - பரிசை. வீரவான்
சென்றோர் - போரிற் புறங் கொடாது உயிர் துறந்து வீர சுவர்க்க
மடைந்தோர், அங்ஙனம் துறக்க மெய்திய வீரர்க்குக் கல்லில் உருச்செய்து
பெயரும் பீடும் எழுதி நடுதல் பண்டை வழக்கமாகும்;
"என்னைமுன் னில்லன்மன்
றெவ்விர் பலரென்னை
முன்னின்று கன்னின் றவர்" |
எனத்
திருக்குறளிலும் இது கூறப்படுதல் காண்க. களமர் - போர்க் களத்தி
லிருப்போர், வீரர். (29)
ஆயதோ மையந் தன்னி லளவிலா வுயிர்க்கு மீன்ற
தாயனார் துலைபோல் யார்க்குஞ் சமநிலை யாய கூடல்
நாயனார் செழியன் றானை நனந்தலை வேத நாற்காற்
பாயதோர் தண்ணீர்ப் பந்தர் பரப்பியப் பந்தர் நாப்பண். |
(இ
- ள்.) ஆயது ஓர் அமையம் தன்னில் - இவ்வாறான அமையத்தில், அளவு இலா
உயிர்க்கும் ஈன்ற தாய் அன்னார் - அளவிறந்த உயிர்
களனைத்திற்கும் பெற்ற தாய் போன்றவராகிய, துலைபோல் யார்க்கும்
சமநிலை ஆய - தராசின் நாவினைப்போல் யாவரிடத்தும் நடுவு நிலையைப்
பொருந்திய, கூடல் நாயனார் - மதுரைப் பெருமானாகிய சோமசுந்தரக்
கடவுள், செழியன் தானை நனந்தலை - பாண்டியன் படையின் நடுவுள்,
வேதம் நால்கால் பாயது ஓர் தண்ணீர்ப் பந்தர் பரப்பி - நான்கு வேதங்களும் நான்கு
கால்களாகப் பொருந்தியதொரு தண்ணீர்ப் பந்தர் வைத்து, அப்பந்தர்
நாப்பண் - அப்பந்தரின் நடுவில்.
ஓர்
: அசை, எல்லாவுயிர்களிடத்தும் பேரருளுடைய இறைவனுக்குப்
பகையும் நொதுமலும் நண்பும் இல்லை யென்பார் யார்க்கும் சம நிலையாய
என்றார். யாவர் கண்ணும் நடுவுநிலையுடைய பெருமான் ஈண்டுச்
செழியன்றானை நாப்பண் தண்ணீர்ப் பந்தர் வைத்துச் செழியற்கு வெற்றியும்
சோழற்குத் தோல்வியும் எய்துவித்தது ஆன்மாக்களின் வினைகட் கீடாக
அறக்கருணையால் அருளலும் மறக்கருணையால் ஒறுத்துக் குற்றந்
தீர்த்தலுமாகிய அவரது அருட்செயலின் பெற்றியே யாமென்க. பாயது -
பொருந்திய தென்னும் பொருட்டு. பரப்பி - பரப்புடைத்தாக வைத்து. பந்தர் :
ஈற்றுப்போலி. (30)
புண்டர நுதலுங் காதின் புறத்தணி மலரும் பாத
முண்டக மலர்மே லொற்றைக் கிண்கிணி முழங்குங் கச்சியாப்
புண்டதோ லுடையுங் கண்டோ ருள்ளமுங் கண்ணுங் கொள்ளை
கொண்டபுன் னகையு முள்ளக் கருணையின் குறிப்புந் தோன்ற. |
(இ
- ள்.) புண்டர நுதலும் - திரிபுண்டர மணிந்த நெற்றியும் காதின்
புறத்து அணி மலரும் - காதின் மீது அணிந்த மலரும், பாத முண்டக மலர்
|