மேல் - திருவடியாகிய
தாமரை மலர் மேல், ஒற்றைக் கிண்கிணி முழங்கும் -
ஒற்றைச் சதங்கையின் ஒலியும், கச்சு யாப்புண்ட தோல் உடையும் - கச்சினால் இறுகக்
கட்டப்பட்ட புலித்தோலாடையும், கண்டோர் உள்ளமும் கண்ணும் -
நோக்கினவர்களின் உள்ளத்தையும் விழிகளையும், கொள்ளை கொண்ட
புன்னகையும் - கொள்ளை கொண்ட புன்முறுவலும், உள்ளக்கருணையின்
குறிப்பும் தோன்ற - திருவுள்ளத்தி லெழுந்த அருட் குறிப்பும் புலப்பட.
புறம்
ன்பதை ஏழனுபு பாக்கிக் காதினிடத் தணிந்த என்றலுமாம்.
கச்சியாப்பு : குற்றிகரம். கருணையின் குறிப்பு - கருணையை வெளிப்படுத்தும் தோற்றம்.
(31)
அருமறை யகத்து ணின்றாங் கருந்தவ ராகி வேணிப்
பொருபுனல் பூரித் தாங்கோர் புண்ணியச் சிரகந் தாங்கி
ஒருவருக் கொன்றே யாகி யிலக்கருக் கிலக்க மாகித்
தருகுறும் புழையால் வாக்கித் தணித்தனர் தண்ணீர்த் தாகம். |
(இ
- ள்.) அருமறை அகத்துள் நின்றாங்கு - அரிய வேதத்தினுள்ளே
நின்ற நிலைபோல, அருந்தவர் ஆகி - அரிய தவக்கோல முடையராகி, ஓர்
புண்ணியச் சிரகம் - ஒரு புண்ணிய வடிவாகிய நீர்க் கரகத்தினை, வேணிப்
பொரு புனல் பூரித்துத் தாங்கி - சடையிலுள்ள (அலைகள்) மோதுங் கங்கை
நீரை நிறைத்து ஏந்தி, ஒருவருக்கு ஒன்றே ஆகி இலக்கருக்கு இலக்கம் ஆகித்
தரு - ஒருவருக்கு ஒரு தாரையாகவும் இலக்கம் பேருக்கு இலக்கந்
தாரையாகவு மிருந்து நீரைத் தருகின்ற, குறும் புழையால் வாக்கி - (அதன்)
சிறிய துவாரத்தால் நீரை வார்த்து. தண்ணீர்த் தாகம் தணித்தனர் - நீர்
வேட்கையைப் போக்கினார். வேதத்துள் நின்ற நிலை - வேதத்தாற் கூறப்படும் நிலை;
இறைவன் தவ வடிவினனாகக் கூறப்படுதலை,
"நீரற வறியாக்
கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே" |
என்னும் புறப்பாட்டானு
மறிக. பூரித்தாங்கு என்பதில் ஆங்கு அசை;
பூரித்தாற்போல என்பாருமுளர். இலக்கர் - நூறாயிரவர்; எண்ணிலார்
என்றபடி. வாக்கி - வார்த்து. இங்ஙனம் இறைவன் தண்ணீர்ப்பந்தர் வைத்த
அருட் செயல்,
"தண்ணீர்ப்
பந்தர் சயம்பெற வைத்து
நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்" |
எனத திருவாசகத்திற்
குறிக்கப் பெற்றுளது. (32)
சுந்ததப் புத்தேள் வைத்த துறுமலர் வாசத் தெண்ணீர்ப்
பந்தாபுக் கடைந்து நன்னீர் பருகியெய்ப் பகல வாற்றல்
வந்தபின் செழியன் றன்னோர் வளவன்மே லேறிச் சீறி
அந்தமி லனிகஞ் சிந்தித் தும்பைவேய்ந் தடுபோர் செய்தார். |
|