முன்போய் விடுத்து
- நஞ்சு தங்கிய திரு மிடற்றினையுடைய இறைவன்
திருமுன் கொடுபோய் விடுத்து, எஙநடிம கருத்து யாது என்ன - எந்தையே
நின் திருவுள்ளம் யாதென்று, நடுவந்த நிலையான் கேட்ப - நடுவு நிலைமை
பொருந்திய பாண்டியன் வினவ, நாயகன் நிகழ்த்தும் - இறைவன்
கூறியருளுவான்.
சோ
- தலைமை. தமையனுக்கு மனைவியாகக் குறித்தவளை மணஞ்
செய்தமையாலும் தமையனது அரசினை வௌவப் போர்க்கு வந்தமை யாலும்
வடுவந்த தம்பி என்றார். கடுவந்த - கடுப்பொருந்திய. நடுவந்தநிலை -
நடுவாகப் பொருந்திய நிலை. என்ன என்பதற்கு என்று வினவ என்று கூறி, கேட்ப என்பதற்குச்
செவியேற்க என்றுரைத்தலுமாம். மன்னும் ஓவும்
அசைகள். (35)
அறவனீ யல்லை யோவுன் னகத்தினுக் கிசைந்த செய்கென்
றிறைவன தருளால் வானின் றெழுமொழி கேட்டு வையைத்
துறைவனு மறத்தி னாற்றாற் சோழனைச் சிலமால் யானை
மறவயப் பரிபூண் மற்றும் வழங்கினான் விடுத்தான் பின்னர். |
(இ
- ள்.) நீ அறவன் அல்லையோ - நீ அறநெறி பிழையாதவ
னல்லையோ, உன் அகத்தினுக்கு இசைந்த செய்த என்று - உன்
உள்ளத்திற்குப் பொருந்திய செய்கையைச் செய்யக் கடவை என்று,
இறைவனது அருளால் வான் நின்று எழும் மொழிகேட்டு - இறைவன்
திருவருளால் வானினின்று உண்டாகும் மொழியைக்கேட்டு, வையைத்
துறைவனும் - வையையின் நீர்த்துறையையுடைய பாண்டியனும், அறத்தின்
ஆற்ால் - அறநெறியால், சோழனை - காடு வெட்டிய சோழனை, சிலமால்
யானை மறவயப்பரி பூண்மற்றும் வழங்கினான் விடுத்தான் - சில மத
யானைகளையும் வெற்றியையும் வன்மையையுமுடைய குதிரைகளையும்
அளிகளையும் பிறவற்றையும் கொடுத்து விடுத்து, பின்னர் - பின்பு.
போரில்
அகப்பட்ட வேந்தரைக் கொடுமையாக நடத்துதல் தகா
தென்பதும், சோழனும் தமக்கு அன்பனாயும் பாண்டியற்கு நண்பனாயும்
இருந்தவனென்பதும் தோன்ற அறவன் நீ அல்லையோ எனக்
கூறியருளினார். செய்கென்று, அகரம் தொகுத்தல், எழுந்தது அங்ஙனம்
எழுந்த மொழியைக் கேட்டு என விரிக்க. வழங்கினான், விடுத்தான் என்பன
எச்சங்களாயின. (36)
வள்ளறன் றம்பி யென்னு மன்னவர் சிங்கந் தன்னைத்*
தள்ளறன் தறுக ணாண்மைத் தருக்கறத் தானாள் செல்வ
முள்ளன சிறிது மாற்றி யொதுக்கியெவ் வுயிர்க்குந் தாயாய்ப்
பள்ளநீ ரகிலங் காத்துப் பல்வளம் பழுக்க வாழ்ந்தான். |
(இ
- ள்.) வள்ளல் - இராசேந்திர பாண்டியன், தன் தம்பி என்னும்
மன்னவர் சிங்கம் தன்னை - தன் இளவல் என்று சொல்லப்படும் இராச
சிங்கனை, தள் அறுந் தறுகண் ஆண்மைத் தருக்கு அற - தள்ளுதற் கரிய
அவனது அஞ்சாமையும் ஆண்மைச் செருக்கும் நீங்க, தான் ஆள் செல்வம் உள்ளன - தான்
ஆளுஞ் செல்வங்களாயுள்ளவற்றுள், சிறிது மாற்றி ஒதுக்கி
(பா
- ம்.) * சிங்கன் றன்னை.
|