இகழ்தலாவது
அவரை எளியரெனக் கருதினமையே. இங்ஙனம் என்பது
ஈறு தொக்கு நின்றது; இவ்விடம் என்னும் பொருட்டாயது. சொன்னேன்,
சொல்வித்தேன் : பிறவினைப் பொருட்டு. என்னில் - என்கண். பெறத்தக்க
குறை என விரிக்க. நானே - குறையெலா முடைய யானே. (2)
ஆனந்த சித்தர்
தமைக்காண்பலென் றன்பு கூர்ந்த
மீனந் தரித்த கொடிவேந்தன் குறிப்பு நோக்கி
மோனந் தரித்த சிவயோகரு முந்தித் தம்பொன்
மானந் தனக்கு வடமேற்றிசை வந்தி ருந்தார். |
(இ
- ள்.) ஆனந்த சித்தர் தமைக் காண்பல் என்று அன்பு கூர்ந்த -
ஆனந்த வடிவாகிய சித்த மூர்த்திகளைத் தரிசிப்பேனென்று அன்பு மிகுந்த,
மீனம் தரித்த கொடிவேந்தன் குறிப்பு நோக்கி - கயல் எழுதிய கொடியினை
யுயர்த்திய அபிடேக பாண்டியனது உள்ளக் குறிப்பினை உணர்ந்து, மோனம்
தரிதத சிவயோகரும் - மௌனநிலை குறிப்பினை உணர்ந்து, மோனம் தரித்த சிவயோகரும்
- மௌனநிலையினைப் பூண்ட சிவயோகியாகிய சித்தரும்,
முந்தி - முன்னாகவே, தம் பொன் மானம் தனக்கு வடமேல் திசை
வந்திருந்தார் - தமது பொன் விமானத்திற்கு வடமேற்குத் திசையின்கண்
வந்து இருந்தருளினார்.
வேந்தன்
அன்பு கூர்ந்தான், அவன் குறிப்பு நோக்கி வந்திருந்தார்;
என வுரைத்துக்கொள்க. மீனத்தைத் தாங்கிய கொடி. மோன முத்திரை
தரித்த என்றுமாம். மானம் : முதற்குறை. (3)
அருகாத செல்வத்
தவனன்றுதைத் திங்க டோற்றம்
வருகால மாக மதுரேசனை வந்து வந்தித்
துருகா தரத்தாற்* கழிந்துள்வல மாக மீள+
வருவா னவன்முன் வருகாஞ்சுகி வன்கண் மாக்கள். |
(இ
- ள்.) அன்று தைத் திங்கள் தோற்றம் வரு காலமாக - அந்நாள்
தைமாதம் தோன்றுங் காலமாக, அருகாத செல்வத் தவன் - குறையாத
செல்வத்தினையுடைய பாண்டியன், வந்து மதுரேசனை வந்தித்து - வந்து
மதுரை நாயகனை வணங்கி, உருகு ஆதரத்தால் கழிந்து - உருகும்
அன்பினால் மிகுந்து, மீள உள் வலமாக வருவான் - மீண்டு உள்ளே வலமாக
வரா நிற்க, அவன் முன் வரு - அவனுக்கு முன்னர் வருகின்ற, வன்கண்
காஞ்சுகி மாக்கள் - அஞ்சாமையையுடைய மெய் காப்பாளர்.
தோற்றம்
வரு காலமாக - தோன்றுங் காலமாகா நிற்க; அந்
நன்னாளிலே என விரித்துக்கொள்க. கழிந்து - விஞ்சி; கழி என்னும்
உரிச்சொல்லடியாகப் பிறந்தது. ஆதரம் கழிந்து என்பதனை ஆதரத்தாற்
கழிந்து என்றார். உள் கழிந்து எனக் கூட்டி, உள்ளிடத்தினீங்கி
என்றுரைத்தலுமாம். வருவான் என்பதனை வாரா நிற்க எனச்
(பா
- ம்.) * உருகாதரத்தான். +வலமாக முன்பு.
|