(இ
- ள்.) நரம்பின் ஏழு இசை யாழிசைப் பாடலும் - நரம்பின்
கண்ணமைந்த குரல் முதலிய ஏழிசைகளையுடைய யாழின் வழியே பாடும்
மிடற்றுப்பாடலும், நடநூல் நிரம்பும் ஆடலும் - பரத நூலிற் கூறும்
இலக்கணம் நிரம்பிய ஆடலும், பெண் நல நீர்மையும் - பெண் கட்குரிய
அழகின் றன்மையும், பிறவும் - ஏனையவுமாகிய இவற்றால், அரம்பை மாதரை
ஒத்தனள் - அரம்பை மகளிரை நிகர்த்தனள், அறன் நெறி ஒழுகும்
வரம்பினால் - சிவபுண்ணிய நெறியில் நடக்குங் கடப்பாட்டால், அவர் தமக்கு
மேல் ஆயினாள் - அவ்வர மகளிரினும் மேம்பட்டவளானாள்.
ஏழிசை
- குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
என்பன. யாழ்ப்பாடலும் அதன்வழியே அதனை யொத்துப் பாடும் மிடற்றுப்
பாடலும் என்பார், ஏழிசை யாழிசைப் பாடலும் என்றார். பெண்ணலம் -
பெண்டிர்க்குரிய அழகு. நாடக மகளிர் ஆடல் பாடல் அழகு என்பவற்றாற் சிறந்திருக்க
வேண்டுமென்பதனை,
"ஆடலும் பாடலு
மழகு மென்றிக்
கூறிய முறையி னொன்றுகுறை படாமல்" |
என்னும் சிலப்பதிகார
அரங்கேற்றுகாதை யடிகளானறிக. பிறவென்றது
இன்சொல் முதலியவற்றை. அரம்பை மாதர் - ஊர்வசி முதலாயினார். தவப்பேறனாள் ஒருத்தியளள்
அவள் அணங்கனாள் அமுதனையாள்
ஒத்தனள் மேலாயினாள் என முடிக்க. மன்னும் ஓவும் அசைகள். (5)
ஆய மாதர்பேர் பொன்னனை யாளென்ப வவடன்
நேய வாயமோ டிரவிரு ணீங்குமு னெழுந்து
தூய நீர்குடைந் துயிர்புரை சுடர்மதிக் கண்ணி
நாய னாரடி யருச்சனை நியமமு நடாத்தி. |
(இ
- ள்.) ஆய மாதர்பேர் பொன்னையாள் என்ப - அன்னளாகிய
மாதின் பெயர் பொன்னனையாள் என்று கூறுவர், அவள் தன் நேய
ஆயமோடு - அவள் தன்னுடைய அன்புள்ள தோழியர் கூட்டத்தோடும்,
இரவு இருள் நீங்குமுன் எழுந்து - இரவின் இருள் புலர்தற்குமுன்னரே
துயிலுணர்ந் தெழுந்து, தூயநீர் குடைந்து - புனிதமான நீரில் மூழ்கி, உயிர்
புரை - உயிரையொத்த, சுடர்மதிக்கண்ணி நாயனார் - ஒளி பொருந்திய
பிறைமதியைக் கண்ணியாகச் சூடிய சிவபெருமானுடைய, அடி அருச்சனை
நியமமும் நடத்தி - திருவடிகளை அருச்சித்தலாகிய கடனையும் இயற்றி.
என்ப,
அசையுமாம். இருணீங்குமுன் - வைகறையில், கண்ணி - முடியிற்சூடும் மாலை. நாயனார் - தலைவர்.
உயிர்புலை நாயனார்
என்க. (6)
திருத்தர் பூவண வாணரைச் சேவித்துச் சுத்த
நிருத்த மாடிவந் தடியரைப் பொருளென நினையுங்
கருத் ளாயருச் சித்தவர் களிப்பவின் சுவையூண்
அருத்தி யெஞ்சிய தருந்துவா ளஃதவ ணியமம். |
|