(இ
- ள்.) திருத்தர் பூவணவாணரைச் சேவித்து - தூயராகிய திருப்
பூவணநாதரை வணங்கி, சுத்த நிருத்தம் ஆடி - சுத்தநாடகம் ஆடி, வந்து -
இல்லிற்கு வந்து, அடியரைப்பொருள் என நினையும் கருத்தளாய் -
சிவனடியார்களை மெய்ப்பொருளென்று கருதும் உள்ளமுடையாளாய்,
அருச்சித்து - பூசித்து, அவர் களிப்ப இன்சுவை ஊண் அருத்தி - அவர்
மகிழுமாறு இனிய சுவையோடு கூடிய உணவினை உண்பித்து, எஞ்சியது
அருந்துவாள் - எஞ்சிய உணவினை உண்பாள்; அஃது அவள் நியமம் -
அஃது அவள் நாடொறும் இயற்றும் கடனாகும்.
வாணர்,
வாழ்நர் என்பதன் மரூஉ. சுத்த நிருத்தம் - சொக்கம்;
சாந்தமாக ஆடும் சாந்திக் கூத்தின் வகை நான்கனுள் ஒன்று; நூற் றெட்டுக்
கரணமுடையது. இனி மத்தள முதலியனவின்றிச் செய்யப்படும் கூத்து
என்றுமாம். அயிர் - வினைத்துயர் தீர்க்கும் திருவேட முடைய சிவனடியார்.
எஞ்சியது - மிச்சில். நியமம் - தவிராக்கடன். (7)
மாத ரிந்நெறி வழங்குநாண் மற்றவ ளன்பைப்
பூத லத்திடைத் தெருட்டுவான் பொன்மலை வல்லி
காத னாயகன் றிருவுருக் காணிய வுள்ளத்
தாத ரங்கொடுத் தருளினார் பூவணத் தையர். |
(இ
- ள்.) மாதர் இந்நெறி வழங்கும் நாள் - பொன்னனையாள் இந்த
நெறியில் ஒழுகும் நாளில், பூவணத்து ஐயர் - திருப்பூவணத்து இறைவர்,
மற்றவள் அன்பை - அப்பொன்னனையாள் அன்பினை, பூதலத்திடை
தெருட்டுவான் - நிலவுலகிலுள்ளாருக்கு அறிவிக்க, பொன்மலை வல்லி
காதல் நாயகன் - உமையம்மையின் அன்புள்ள நாயகனாகிய
சிவபெருமானுடைய, திரு உருக்காணிய - திருமேனியைச் சமைக்க, உள்ளத்து
ஆதரம் கொடுத்தருளினார் - (அவள்) மனத்தின்கண் ஆசையைக்
கொடுத்தருளினார்.
காதல்
எனப் பொருள்படும் மாதர் என்னும் உரிச்சொல்லே பின்
மகளிரைக் குறித்ததாகலின், அஃது ஒருமையிலும் வழங்கும். மற்று : அசை.
தெருட்டுவான் : வானீற்று வினையெச்சம். பொன்மலைவல்லி காதனாயகன்
றிருவுரு - தமது திருவுரு. காணிய - இயற்ற : செய்யிய என்னும்
வினையெச்சம். ஐயர் அவள் அன்பைத் தெருட்டுவான் திருவுருக் கரணிய
ஆதரங் கொடுத்தருளினார் என்க. (8)
சுயர் தந்தபே ரன்புரு வாயினாண் மழுமான்
கையர் தந்திரு வுருவினைக் கருவினாற் கண்டு
மைய கண்ணினாள் வைகலும் வரும்பொரு ளெல்லாம்
பொய்யி லன்புகொண் டன்பர்தம் பூசையி னேர்வாள். |
(இ
- ள்.) மைய கண்ணினாள் - மைதீட்டிய விழிகளையுடைய
பொன்னனையாள், ஐயர் தந்தபேர் அன்பு உரு ஆயினாள் - இறைவர்
கொடுத்தருளிய பெரிய அன்பே வடிவமாகியவளாய், மழுமான் கையர்
தம் திரு உருவினை - மழுவையும் மானையும் திருக்கரத்திலேந்திய
சிவபெருமானது திருமேனியை, கருவினால் கண்டு - கருவில் உளதாக்கி,
வைகலும் வரும் பொருள் எல்லாம் - நாள்தோறும் வருகின்ற பொருள்
|