II


இரசவாதஞ்செய்த படலம்283



முழுதையும், பொய்இல் அன்புகொண்டு - பொய்யில்லாத (மெய்) அன்பினால்,
அன்பர்தம் பூசையில் நேர்வாள் - அடியார் பூசையிலே செலுத்துவாள்.
ஆயினாள் : முற்றெச்சம், தம் இரண்டும் சாரியை. கரு - குழவியுருத்
தோன்றும் தாயின் கருப்போன்று உலோகங்களினாய உருவார்க்கப்படுதற்கு
மெழுகினால் அமைக்கப்படும் வடிவம். இம் மெழுகுருவமைத்தலைக்
கருக்கட்டுதல் என்பர். மைய : குறிப்புப் பெயரெச்சம். வரும்பொருள் -
ஆடல் பாடல் முதலியவற்றால் வரும் பொருள். (9)

அடியா பூசனைக் கன்றியெஞ் சாமையா லடிகள்
வடிவு காண்பதெப் படியென்று மடியிலச் செழியற்
கொடிவில்* பொற்கிழி நல்கிய வள்ளலை யுன்னிப்
பிடிய னாளிருந் தாளஃ தறிந்தனன் பெருமான்.

     (இ - ள்.) அடியா பூசனைக்கு அன்றி - அடியார்களின் வழி
பாட்டிற்கே யல்லாமல், எஞ்சாமையால் - பொருள் மிஞ்சாமையினால்,
அடிகள் வடிவுகாண்பது எப்படி என்று - இறைவரின் திருவுருவமைத்தல்
எங்ஙனமென்று கருதி, மடிஇல் அச்செழியற்கு - சோம்பலில்லாத அக்குல
பூடண பாண்டியனுக்கு, ஒடிவு இல் பொற்கிழி நல்கிய வள்ளலை உன்னி -
குறையாத பொற்கிழியினையருளிய சோமசுந்தரக் கடவுளைச் சிந்தித்து,
பிடிஅனாள் இருந்தாள் - பெண் யானைபோல்பவளாகிய அப்
பொன்னனையாள் இருந்தனள்; பெருமான் அஃது அறிந்தனன் - இறைவன்
அதனைத் திருவுளங் கொண்டான்.

     அகரம் பண்டறிசுட்டு. ஒடிவில் கிழி - உலவாக் கிழி. தனக்கும்
பொன்னருளுவர் என்னுங் கருத்துடன் சித்தித்தாள் என்பார் ‘பொற்கிழி
நல்கிய வள்ளலை யுன்னி’ என்றார். (10)

துய்ய நீறணி மெய்யினர் கட்டங்கந் தொட்ட
கையர் யோகபட் டத்திடைக் கட்டினர் பூதிப்
பையர் கோவண மிசையசை யுடையினர் பவளச்
செய்ய வேணிய ரங்கொரு சித்தராய் வருவார்.

     (இ - ள்.) துய்யநீறு அணி மெய்யினர் - தூய திருநீறு தரித்த
மெய்யினையுடையவரும், கட்டங்கம் தொட்ட கையர் - மழு ஏந்திய
திருக்கரத்தையுடையவரும், யோகபட்டத்து இடைக்கட்டினர் - யோக
பட்டிகையை இடையிற் கட்டியவரும், பூதிப்பையர் - திருநீற்றுப்
பையினையுடையவரும், கோவணமிசை அசை உடையினர் - கோவண
மீது கட்டிய ஆடையையுடையவரும், பவளச்செய்ய வேணியர் - பவளம்
போன்ற சிவந்த சடையையுடையவரும், பவளச்செய்ய வேணியர் - பவளம்
போன்ற சிவந்த சடையையுடையவருமாகி, ஒரு சித்தராய் அங்கு வருவார் -
ஒரு சித்தமூர்த்தியாய் அங்கு வருவாராயினர்.

     கட்டங்கம் - மழு; முன்னர் உரைத்தமை காண்க. அசை - அசைத்த,
கட்டிய. மெய்யினர் முதலிய குறிப்பு முற்றுக்கள் எச்சமாயின. (11)


     (பா - ம்.) * மடிவில்.