வந்து பொன்னனை யாண்மணி மாளிகை குறுகி
அந்த மின்றிவந் தமுதுசெய் வாரொடு மணுகிச்
சிந்தை வேறுகொண் டடைந்தவர் திருவமு தருந்தா
துந்து மாளிகைப் புறங்கடை யொருசிறை யிருந்தார். |
(இ
- ள்.) வந்து பொன் அனையாள் மணிமாளிகை குறுகி -
(அங்ஙனம்) வந்து பொன்னனையாளின் அழகிய திருமாளிகையை அடைந்து,
சிந்தை வேறு கொண்டு அடைந்தவர் - வேறு கருத்துடன் வந்த அச்சித்த
மூர்த்திகள், அந்தம் இன்றிவந்து அமுது செய்வாரொடும் அணுகி -
அளவில்லாமல் வந்து உண்பவரோடும் கூடி, திரு அமுது அருந்தாது -
திருவழுது செய்யாமல், உந்தும் மாளிகைப் புறங்கடை - ஒளிவீசும்
மாளிகையன் கடைவாயிலில், ஒருசிறை இருந்தார் - ஒரு பக்கத்தில்
இருந்தருளினார்.
சிந்தை
வேறுகொண்டு அடைந்தவர் - ஏனையடியார்போலத் திரு
வமுதருந்துங் கருத்தின்றி இரசவாதஞ் செய்யுங் கருத்துடன் போந்தவர்.
உந்துதல் - (ஒளி) வீசுதல்; மேல் நிவத்தலுமாம். வந்து குறுகி அருந்தாது
ஒரு சிறையிருந்தார் என்க. (12)
அமுது செய்தருந் தவரெலா மகலவே றிருந்த
அமுத வாரியை யடிபணிந் தடிச்சிய ரைய
அமுது செய்வதற் குள்ளெழுந் தருள்கென வுங்கள்
அமுத னாளையிங் கழைமினென் றருளலு மனையார். |
(இ
- ள்.) அமுதுசெய்து அருந்தவர் எலாம் அகல - அரிய
தவத்தினையுடைய அடியவரெல்லாருந் திருவமுதுசெய்து செல்ல, வேறு
இருந்த அமுதவாரியை அடிச்சியர் அடிபணிந்து - வேறாக இருந்த அமுத
வெள்ளமாகிய சித்த மூர்த்திகளைத் தாதியர் அடிவணங்கி, ஐய - ஐயனே,
அமுதுசெய்வதற்கு உள் எழுந்தருள்க என - திருவமுது செய்வதற்கு
உள்ளே எழுந்தருளவேண்டுமென்று வேண்ட, உங்கள் அமுது அன்னாளை
இங்கு அழைமின் என்று அருளலும் - அவர் உங்கள் அமுதம் போன்ற
தடிலவியை இங்கே அழைமின்கள் என்று அருளிச்செய்யவும், அனையார் -
அந்த ஏவன்மகளிர்.
அடிபணிந்து
என்பது ஒரு சொல்லாய் இரண்டாவதற்கு முடிபாயிற்று.
அடிச்சியர் - அடித்தொண்டு புரியும் தாதியர், குற்றேவன் மகளிர்.
அருள்கென, அகரம் தொகுத்தல். (13)
முத்த ராமுகிழ வாணகை யல்குலாய் முக்கண்
அத்த ரானவர் தமரெலா மமுதுசெய் தகன்றார்
சித்த ராயொரு தம்பிரான் சிறுநகை யினராய்
இதத ராதலத் தரியரா யிருக்கின்றா ரென்றார். |
(இ
- ள்.) முத்து அரா - முத்தினையும் பாம்பின் - படத்தினையும்
முறையே நிகர்த்த, வாள்முகிழ் நகை அல்குலாய் - ஒள்ளிய புன்னகையையும்
அல்குலையுமுடைய அம்மையே, முக்கண் அத்தர் ஆனவர் தமர் எலாம் -
மூன்று கண்களையுடைய சிவபெருமானுடைய சுற்ற
|