மாகிய அடியார்களனைவரும்,
அமுதுசெய்து அகன்றார் - திருவமுது செய்து
நீங்கினர்; ஒரு தம்பிரான் சித்தராய் - ஒரு தம்பிரான் சித்த மூர்த்தியாய்,
சிறுநகையினராய் - புன்னகையுடையராய், இத்தராத லத்து அரியராய்
இருக்கின்றார் என்றார் - இந்நிலவுலகின்கண் கிடைததற் கரியராய்
இருக்கின்றார் என்று கூறினர்.
முத்துப்போலும்
நகை அராப்போலும் அல்குல் என நிரனிறை.
இருக்கின்றார் - அமுது செய்யாதிருக்கின்றார். (14)
நவம ணிக்கலன் பூத்தபூங் கொம்பரி னடந்து
துவரி தழ்க்கனி வாயினாள் சுவாகதங் கிலவென்
றுவமை யற்றவர்க் கருக்கிய மாசன முதவிப்
பவம கற்றிய வடிமலர் முடியுறப் பணிந்தாள். |
(இ
- ள்.) தவர் இதழ்க்கனி வாயினாள் - பவளம்போன்ற இதழையும்
கொவ்வைக் கனிபோன்ற வாயையுமுடைய பொன்னனையாள், நவமணிக்கலன்
பூத்த - நவரத்தினங்களாலாகிய அணிகலன்கள் மலர்ந்த, பூங்கொம்பரின்
நடந்து - பூங்கொம்புபோல நடந்து, சு ஆகதம் கில என்று - (தேவரீர் வரவு)
நல்வரவல்லவா என்று கூறி, உவமை அற்றவர்க்கு - ஒப்பற்ற சித்த
மூர்த்திகளுக்கு, அருக்கியம் ஆசனம் உதவி - அருக்கியமு ஆசனமுங்
கொடுத்து, பவம் அகற்றிய அடிமலர் - அடியார் பிறப்பை நீக்கிய திருவடி
மலர்கள், முடி உறப் பணிந்தாள் - முடியுற் பொருந்த வணங்கினாள்.
முதலடி
இல்பொருளுவமை. கொம்பர் : ஈற்றுப்போலி. அருக்கிய
என்றதனால் இனம் பற்றிப் பாத்தியம் ஆசமனீயம் என்பவும் கொள்க.
அகற்றிய என்பதனைச் செய்யியவென்னும் வினையெச்சமாக்கித், தனது
பிறப்பைப் போக்குதற்கு என்றுரைத்தலுமாம். அடிமலரை முடி பொருந்த
என்றுமாம். (15)
எத்த வஞ்செய்தே னிங்கெழுந் தருளுதற் கென்னாச்
சித்தர் மேனியும் படிவெழிற் செல்வமு நோக்கி
முத்த வாணகை யரும்பநின் றஞ்சலி முகிழ்ப்ப
அத்தர் நோக்கினா ரருட்கணா லருள்வலைப் பட்டாள். |
(இ
- ள்.) சித்தர்மேனியும் - சித்தமூர்த்திகளின் திருமேனியையும்,
படிவு எழில் செல்வமும் நோக்கி - வடிவினது அழகின் செல்வத்தையுங்
கண்டு, முத்தவாள் நகை அரும்ப நின்று - முத்துப்போன்ற ஒள்ளிய
புன்னகை தோன்ற நின்று, இங்கு எழுந்தருளுதற்கு எத்தவம் செய்தேன்
என்னா - (தேவரீர்) இங்கு எழுந்தருளுதற்கு என்ன தவம் செய்தேனோ
வென்று, அஞ்சலி முகிழ்ப்ப - கையைச் சென்னியிற் குவித்து வணங்க,
அத்தர் நோக்கினார் அருள் கண்ணால் - இறைவர் திருவருள் நாட்டத்தால்
நோக்கி யருளினார்; அருள் வலைப்பட்டாள் - (பொன்னனையாள்) திருவருளாய வலையில்
அகப்பட்டனள்.
படிவு
- படிவம் : ஈறு தொக்கது. செல்வம் - பெருக்கம். நோக்குதல்
- சுட்சு தீட்சையாகும். பத்தி வலையிற்பட்ட பரமனது அருள் வலையிற்
|