(இ
- ள்.) நல் அறம் அதிகம் நிற்பது என்று அறிந்தனை - நன்றாகிய
அறமே சிறப்புடையதும் நிலைபெறுவதும் என்று உணர்ந்தனை; அறத்துள் -
அவ்வறங்களுள்ளே, சிவபுண்ணியம் அதிகம் ஆம் - சிவ புண்ணியங்கள்
சிறந்தனவாகும் (என்றும்), அவற்றுள் சிவார்ச்சனை அதிகம் ஆம் - அச் சிவ
புண்ணியங்களுள்ளும் சிவபூசை சிறந்ததாகும் (என்றும்), சிவபூசையுள்
அடியவர் பூசை அதிகம் என்று அறிந்து - அச் சிவ பூசையினும் அடியார்
பூசை சிறந்தது என்றும் அறிந்து, அன்பரை அருச்சனை செய்வாய் -
அடியார்களைப் பூசிப்பாயாயினை (அதனால்),
என்று
என்பதனைப் பிறவிடத்துங் கூட்டுக. ஏனை அறங்களினும் சிவ
புண்ணியம் சிவார்ச்சனைகளினும் அடியார் பூசை சிறந்ததென்பதனைப்
பின்வரும் திருமந்திரங்களால் அறிக :
"ஆறிடும்
வேள்வி யருமறை நூலவர்
கூறிடு மந்தணர் கோடிபே ருண்பதில்
நீறிடுந் தொண்டர் நினைவின் பயனிலை
பேறெனி லோர்பிடி பேறது வாகுமே" |
|
"அகர மாயிர
மந்தணர்க் கீயிலென்
சிகர மாயிரஞ் செய்து முடிக்கிலென்
பகரு ஞதனி பகலூண் பலத்துக்கு
நிகரிலை யென்பது நிச்சயந் தானே" |
|
"படமாடக் கோயிற்
பகவற்கொள் றீயின்
நடமாடக் கோயி னம்பர்க்கங் காகா
நடமாடக் கோயி னம்பர்க்கொன் றீயிற்
படமாடக் கோயிற் பகவற்க தாமே." (21) |
|
உறுதி யெய்தினை யிருமையு முன்பெயர்க் கேற்ப
இறுதி யில்வன் றிருவுரு வீகையாற் காணப்
பெறுதி யாகநின் மனைக்கிடைப் பித்தளை யீயம்
அறுதி யானபல கலன்களுங் கொணர்தியென் றறைந்தார். |
(இ
- ள்.) இருமையும் உறுதி எய்தினை - இம்மை மறுமை இரண்டிலும்
பயன் பெற்றனை; உன் பெயர்க்கு ஏற்ப - பொன்னனைாள் என்னும் உன்
பெயருக்குப் பொருந்த, இறுதி இல்லவன் திரு உரு - அழிவில்லாத இறைவன்
திருமேனியை, ஈகையால் காணப் பெறுதியாக - பொன்னாற் செய்யப்
பெறுவாயாக; நின் மனைக் கிடை - நினது மனையிற் கிடக்கும், பித்தளை
ஈயம் அறுதியான பல் கலன்களும் - பித்தனையும் ஈயமு முடிவாவுள்ள பல
உலோகங்களாற் செய்யப்பட்ட கலன்களையும் கொணர்தி என்று அறைந்தார் -
கொண்டு வருவாய் என்று கூறினார்.
ஈகை
- பொன். தாழ்ந்த உலோகங்களைக் கூறி அவை முடிவாகவுள்ள
என ஏனையவற்றைத் தழுவினார். (22)
|