II


இரசவாதஞ்செய்த படலம்289



ஈயஞ் செம்பிரும் பிரசித மென்பவும் புணர்ப்பாற்
றோயம் பித்தளை வெண்கலந் தராமுதற் றொடக்கத்
தாயும் பல்வகை யுலோகமுங் கல்லென வலம்பத்
தேயுஞ் சிற்றிடை கொண்டுபோய்ச் சித்தர்முன் வைத்தாள்.

     (இ - ள்.) ஈயம் செம்பு இரும்பு இரசிதம் என்பவும் - ஈயமும் செம்பும்
இரும்பும் வெள்ளியும் என்பனவும், புணர்ப்பால் தோயும் பித்தளை வெண்கலம் தராமுதல் தொடக்கத்து - ஒன்றோடொன்று கலத்தலால் உண்டாகும்
பித்தளையும் வெண்கலமும் தராவு முதலிய தொடக்கத்தை யுடையவும் ஆகிய,
ஆயும் பல்வகை உலோகமும் - ஆராயும் பலவகை உலோகங்களையும்; கல்
என அலம்ப - கல்லென்று ஒலிக்க, தேயும் சிற்றிடை - தேய்ந்த சிறிய
இடையையுடைய பொன்னனையாள், கொண்டு போய்ச் சித்தர்முன் வைத்தாள் -
கொண்டுபோய்ச் சித்த மூர்த்திகள் முன்னர் வைத்தனள்.

     ஈயம் முதலியன தனியுலோகமும், பித்தளை முதலியன கலப்பு லோகமும்
என்றார். கல்லென : ஒலிக்குறிப்பு. சிற்றிடை : அன்மொழித் தொகை. (23)

வைத்த வேறுவே றுலோகமு மழுவுழை கரந்த
சித்த சாமிக ணீற்றினைச் சிதறினர் பாவித்*
தித்தை நீயிரா வெரியிலிட் டெடுக்கினன் பொன்னாம்
இத்தை நாயகன் றிருவுருக் கொள்கென வறைந்தார்.

     (இ - ள்.) வைத்த வேறுவேறு உலோகமும் - (அங்ஙனம் கொண்டு
வந்து) வைத்த வெவ்வேறு வகையான் உலோகங்க ளெல்லாவற்றிலும், மழு
உழை கரந்த சித்தசாமிகள் - மழுவையும் மானையும் மறைத்து வந்து
சித்தமூர்த்திகள், நீற்றினைச் சிதறினர் - திருநீற்றைச் சிதறி பாவித்து - (இவை
பொன்னாகவென்று) சிந்தித்து, இத்தை நீ இரா எரியில் இட்டு எடுக்கில் -
இவற்றை நீ இரவில்நெருப்பிலிட்டு எடுத்தாயானால். நன்பொன் ஆம் - நல்ல
பொன்னாகும்; அத்தை - அப் பொன்னினால், நாயகன் திரு உருக்கொள்க
என அறைந்தார் - இறைவன் திருமேனி செய்யக்கடவை எனக் கூறியருளினார்.

     உலோகங்களிலும் என ஏழனுருபு விரிக்க. சிதறினர் : முற்றெச்சம். இது
அது என்பன அன்சாரியை பெறாமல் இரட்டித்தன. உலோகமென்னும் பொதுமையால் இத்தை என ஒருமையாற் கூறினார். எரியிலிடுதல் - புடமிடுதல். அத்தை - அதனால் : வேற்றுமை மயக்கம். கொள்கென : தொகுத்தல். (24)

மங்கை பாகரை மடந்தையு மிங்குநீர் வதிந்து
கங்குல் வாயமு தருந்தியிக் காரிய முடித்துப்
பொங்கு காரிருள் புலருமுன் போமெனப் புகன்றாள்
அங்க யற்கணா டனைப்பிரி யாரதற் கிசையார்.

     (பா - ம்.) * சிதறின பார்த்தே.