(இ
- ள்.) மறைந்து போயினார் எனச் சிறிது அயர்ச்சியும் - மறைந்து
போனாரே என்று சிறிது வருத்தமு, மனத்தில் நிறைந்தது ஓர் பெருங்
கவற்சியை நீக்கினார் என்ன - மனத்தில் நிறைந்துள்ள தாகிய ஒரு பெரிய
கவலையைப் போக்கினாரென்று, சிறந்தது ஓர் பெரு மகிழ்ச்சியும் -
சிறந்ததாகிய ஒரு பெரிய மகிழ்ச்சியும், உடையளாய் - உடையவளாகி, சித்தர்
அறைந்தவாறு - சித்த மூர்த்திகள் கட்டளை யிட்ட வண்ணமே, உலோகங்கள்
அனைத்தும் தீப் பெய்தனள் - உலோகங்கள் அனைத்தையும் தீயிற்
புடமிட்டனள்.
அயர்ச்சி
- சோர்வு. கவர்ச்சி - திருவுருச் சமைத்தற்குப் பொன்
னில்லையே என்னும் கவலை. (27)
அழல் டைந்தபி னிருண்மல வலிதிரிந் தரன்றாள்
நிழல டைந்தவர் காட்சிபோ னீப்பருங் களங்கங்
கழல வாடக மானதா லதுகொண்டு கனிந்த
மழலை யீர்ஞ்சொலாள் கண்டனள் வடிவிலான் வடிவம். |
(இ
- ள்.) அழல் அடைந்த பின் - (உலோகம்) நெருப்பினைச்
சேர்ந்தபின், இருள்மல வலிதிரிந்து - ஆணவமல சத்திகெட்டு, அரன் தாள்
நிழல் அடைந்தவர் காட்சிபோல் - இறைவனது திருவடி ஞானத்தை
அடைந்தவர் சிவமாக விளங்குதல்போல, நீப்பருங் களங்கம் கழல -
நங்குதலில்லாத களிம்பு நீங்க, ஆடகம் ஆனது - பொன்னாகியது; அது
கொண்டு அப்பொன்னினால், கனிந்த மழலை ஈர்ஞ்சொல்லாள் -
சுவைமுதிர்ந்த தண்ணிய மழலைச் சொற்களையுடைய பொன் னனையாள்,
வடிவு இலான் வடிவம் கண்டனள் - ஒரு வடிவமுமில்லாத இறைவனுக்கு ஒரு
திருவுருவம் சமைத்தனள்.
இருள்
மலம் - உயிரின் அறிவை மறைக்கும் இருளாகிய ஆணவ மலம்.
தாள்நிழல் என்றது ஈண்டுத் திருவடி ஞானத்தை. ஆன்மாத் திருவடி
ஞானத்தால் ஆணவமாகிய பசுத்துவம் நீங்கிச் சிவத்ன்மை யெய்தினாற்போல
உலோகம் எரியாற் களிம்பு நீங்கிப் பொன்னாகியது என்க. ஆணவம் செம்பிற்
களிம்பு கோல் அனாதியே உயிரைப்பற்றி யிருப்பதென்பதும், அது ஞானத்தால்
நீங்கவே ஆன்மா சிவமாய் விளங்கு மென்பதும் உண்மை நூற் கொள்கை.
அழலடைந்த பின் களங்கம் கழல ஆடகமானது எனக் கூட்டுக. ஆல் :
அசை. கொண்டு : மூன்றாம் வேற்றுமைச் சொல். (28)
[அறுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
மழவிடை
யுடையான் மேனி வனப்பினை நோக்கி யச்சோ
அழகிய பிரானோ வென்னா வள்ளிமுத் தங்கொண் டன்பிற்
பழகிய பிரானை யானாப் பரிவினாற் பதிட்டை செய்து
விழவுதேர் நடாத்திச் சின்னாள் கழிந்தபின் வீடு பெற்றாள். |
(இ
- ள்.) மழவிடை உடையான் மேனி வனப்பினை நோக்கி -
(அங்ஙனம் சமைக்கப்பெற்ற) இளமையாகிய இடப வூர்தியை யுடைய
இறைவன் திருமேனியின் அழகினைப் பார்த்து, அழகிய பிரானோ என்னா -
|