சுந்தரநாதனோ இவன்
என்று, அள்ளி முத்தம் கொண்டு - (கபோலத்தில்)
அள்ளி முத்தமிட்டு, அன்பில் பழகிய பிரானை - தனது மெய்யன்பில்
இடைவிடாதிருந்த இறைவனை, ஆனாப் பரிவினால் பதிட்டை செய்து -
நீங்காத அன்பினாலே பிரதிட்டை செய்து, விழவுதேர் நடாத்தி - திருவிழாவுந்
தேரும் நடாத்தி, சிலநாள் கழிந்தபின் வீடு பெற்றாள் - சில நாட்கள்
சென்றபின் பொன்னனையாள் வீடு பேற்றினை யெய்தினாள்.
அச்சோ
: வியப்பிடைச் சொல்; பிரானோ என்பதில் ஓகாரமும்
அப்பொருட்டு. பதிட்டை : வடசொற் சிதைவு. தேர் - இரதோற்சவம். (29)
நையுநுண் ணிடையி னாளந் நாயகன் கபோலத் திட்ட
கையுகிர்க் குறியுஞ் சொன்ன காரணக் குறியுங் கொண்டு
வெய்யவெங் கதிர்கால* செம்பொன் மேனிவே றாகி நாலாம்
பொய்யுகத் தவர்க்குத் தக்க பொருந்துரு வாகி மன்னும். |
(இ
- ள்.) நையும் நுண் இடையினாள் - தேய்ற்த நுண்ணிய
இடையையுடைய பொன்னனையாள், அந்நாயகன் கபோலத்து இட்ட கை
உகிர்க்குறியும் - அவ்விறைவன் கபோலத்தின்கண் அள்ளுதற்கிட்ட
கையிலுள்ள நகக்குறியையும், சொன்ன காரணக் குறியும் கொண்டு - அவள்
கூறிய அழகிய பிரான் என்னும் காரணப் பெயரையுங் கொண்டு, வெய்ய
வெம் கதிர்கால் செம்பொன் மேனி வேறு ஆகி - மிக்க விருப்பந்
தருதலையுடைய ஒளிவீசும் சிவந்த பொன்னாலாகிய திருமேனி வேறு பட்டு,
நாலாம் பொய் உகத்தவர்க்கு - பொய்மிக்க கலியுகத்தார்க்கு, தக்க பொருந்து
உரு ஆகி மன்னும் - தக்க பொருந்திய திருவுருவமாய் நிலைபெறும்.
உலகிற்கு
இறைவனும் அவளால் விரும்பப்பட்டவனும் என்பது தோன்ற
அந்நாயகன் என்றார் : வெய்ய வெம் : ஒருபொரு ளிருசொல்; விருப்பத்தைச்
செய்யும் ஞாயிற்றின் கதிர் என்னலுமாம். உகிர்க் குறியும் காரணக் குறியும்
கொண்டு மன்னும், பொருந்துருவாகி மன்னும் எனத் தனித்தனி கூட்டுக. (30)
ஆகச்
செய்யுள் - 1885.
(பா
- ம்.) * கதிர்காய்.
|