இவ்வளவு படைகளையே
தொகுத்து வைத்த, இத்துணைக்கு ஏற்ப நல்கி -
இவ்வளவிற்குப் பொருந்திய பொருள்களைக் கொடுத்து எஞ்சிய பொருள்கள்
எல்லாம் - மிஞ்சிய பொருள் முழுதையும், சித்து உருவான - அறிவே
வடிவமாகிய, கூடல் சிவனுக்கே செலுத்தும் - மதுரையில் எழுந்தருளிய
சிவபெருமானுக்கே செலவிடுவான்.
அயுதம்
- பதினாயிரம். அரசன் பொருளிற் பெரும்பகுதி படையின்
பொருட்டுச் செலவிடப்படுதல் வழக்காகவும் இவன் அதனைக் குறைத்து
இறைவன் பொருட்டுச் செலவிட்டனன் என்க; இதனால், இவன்பகை
வெல்லுதற்கன்றி அரசன் என்பதற்கு ஓர் அறிகுறி யாகவே சிறிது படை
வைத்திருந்தனன் என்பதும், தனக்கும் தனது நாட்டிற்கும் பகைவரால்
நலிவுண்டாகாமல் இறைவன் காத்தருள்வன் எனக் கருதி யிருந்தனன்என்பதும்
பெறப்படும். ஏற்ப - ஏற்றவளவாக; சிறிதென்றபடி. மன், ஓ : அசைகள். (5)
கண்டிகை மகுட மாதிக் கலனிரை குயின்றுந் திங்கண்
மண்டல மிடறுஞ் சென்னிக் கோபுர மாட மாதி
எண்டிசை யிருள்கால் சீப்ப வெரிமணி யிழைத்து வேய்ந்துந்
திண்டிற லுடையா னின்ன திருப்பணி பிறவுஞ் செய்தான். |
(இ
- ள்.) கண்டிகை மகுடம் ஆதி - கண்டிகையும் முடியு முதலாகிய,
கலன் நிரை குயின்றும் - அணிகல வரிசைகளை இயற்றியும், திங்கள்
மண்டலம் இடறும் - சந்திர மண்டலத்தை இடறும்படி யோங்கிய, சென்னி -
சிகரத்தையுடைய, கோபுரம் மாடம் ஆதி - கோபுரமும் திருமாளிகையு
முததலியவற்றை, எண்திசை இருள் கால் சீப்ப - எட்டுத் திக்கிலுமுள்ள
இருளைப் போக்குமாறு, எரிமணி இழைத்து வேய்ந்தும் - மாணிக்க மணிகள்
இழைத் தியற்றியும், திண்திறல் உடையான் - மிக்க வலியினை யுடைய
சுந்தரபாத சேகர பாண்டியன், இன்ன திருப்பணி பிறவும் செய்தான் -
இவைபோன்ற பிற திருப்பணிகளையும் செய்தனன்.
கால்
சீப்ப - ஓட்ட; துணைச்சொல்; கால் என்பதனை ஒளி யாக்கி,
ஒளியால் இருளையோடட என்றுரைத்தலுமாம். கோபுர மாட மாதி வேய்ந்தும்
என்க. எரிமணி - நெருப்புப் போலும் ஒளியுடைய மாணிக்க மணி. (6)
கல்லுமா றகன்ற மார்பன் கருவியின் சிறுமை நோக்கி
மல்லுமா றாத திண்டோள் வளவர்கோ னொருவன் காலிற்
செல்லுமா யிரம்ப ரிக்கோர் சேவக னென்போன் றானே
வெல்லுமா றெண்ணி வஞ்சி வேய்ந்துகொண் டெழுந்து போந்தான். |
(இ
- ள்.) கல்லு மாறு அகன்ற - (திண்மையாலும் பரப்பினாலும்)
மலையுடன் மாறுபட்டு அகன்ற, மார்பன் - மார்பினையுடைய பாண்டியனது,
கருவியின் சிறுமை நோக்கி - சேனையின் சிறுமையைக் கருதி, மல்லு மாறாத
திண்தோற் - மற்போர் இடையறாது செய்யும் திண்ணிய தோளையுடைய,
வளவர்கோன் ஒருவன் - சோழர் மன்னர் ஒருவன், காலில் செல்லும் -
காற்றைப்போல விரைந்து செல்லும், ஆயிரம் பரிக்கு ஓர் சேவகன்
|