கங்குல்வாய்த் திங்கள் போலக் காதணி தந்தத் தோடுங்
கங்குல்வாய் முளைத்த மீன்போற் கதிர்முத்த வடமுங் குஞ்சிக்
கங்குல்வாய்ச் சிலைபோல் வெட்சிக் கண்ணிசூழ் கலாபச் சூட்டுங்
கங்குல்வாய் கிழிக்குந் தந்தக் கடகமு மின்னுக் கால. |
(இ
- ள்.) கங்குல்வாய்த் திங்கள்போல - இரவில் நிலவிய
சந்திரனைப்போல விளங்கும், காது அணி தந்தத் தோடும் - காதின் கண்
அணிந்த தந்தத்தாலாகிய தோடும், கங்குல்வாய் முளைத்த மீன்போல் -
அரவிற் றோன்றிய நாண்மீனைப்போல, கதிர் முத்த வடமும் - ஒளி வீசும்
முத்து மாலையும், கங்குல் வாய்ச் சிலைபோல் - இரவின் கண் தோன்றிய
இந்திர வில்லைப்போல, குஞ்சி வெட்டிசக் கண்ணி சூழ் கலாபச் சூட்டும் -
சிகையிலணிந்த வெட்சி மாலையுடன் சூழ்ந்த மயிற் பீலியாலாகிய நுதலணி
மாலையும், கங்குல் வாய் சிழிக்கும் தந்தக் கடகமும் - இரவின் வாயினைக்
கிழித்து விளங்கும் தந்தவளையும், மன்னுக்கால - ஒளி வீசா நிற்க.
வடிவு
முழுதும் கருமையாயிருந்தமையின் கங்குலை உவமை கூறினார்.
சூட்டு - நுதலின் அணியும் மாலை. இருளை யோட்டு மென்பதனை இரவின்
வாயைக் கிழிக்கும் என்றார். (14)
அண்டத்தா ரமரர் நாம மன்றுதொட் டடையத் தோற்று
கண்டத்தா ரிருளே யெங்கும் கலந்தெனக் கறுத்த மேனி
கொண்டத்தா ராரி னாற்கோர் கூற்றெனக் கொல்வே லேந்திச்
சண்டத்தீ யென்ன நின்றான் காவிரித் தலைவன் காணா. |
(இ
- ள்.) அண்டத்தார் - தேவர்கள், அன்று தொட்டு - (நஞ்சுண்ட)
அந்நாள் தொடங்கி, அமரர் நாமம் அடைய - அமரர் - என்னம் பெயரைப்
பெறும்படி, கண்டத்துத் தோற்று ஆர் இருளே - திருமிடற்றிலே தோன்றிய
நஞ்சாகிய மிக்க இருளே, எங்கும் கலந்தென - உடல் முழுதுங்
கலந்தாற்போல, கறுத்தமேனி கொண்டு - கறுத்த திருமேனி கொண்டு, அ
ஆர் தாரினாற்கு - அந்த ஆத்தி மாலையையணிந்த சோழனுக்கு, ஓர்
கூற்றென - ஒரு கூற்றுவனைப்போல, கொல்வேல் ஏந்தி - கொல்லுதற்
றொழிலையுடைய வேற்படையினை ஏந்தி, சண்டத்தீ என்ன நின்றான் -
ஊழித்தீப்போல நின்றருளினான்; காவிரித் தலைவன் காணா - (அதனைக்)
காவிரித் தலைவனாகிய சோழன் கண்டு.
அமரர்
என்னுஞ் சொல்லுக்கு மரணமில்லாதவர் என்பது பொருள்.
ஆலாலம் உண்டாய போழ்து இறைவன் அதனை உண்டருளி
வானோரனைவரும் மரித்தொழியாது காத்தமையின் அண்டத்தார் அமரர்
நாமம் அடையத் தோற்று என்றார். அண்டத்திலே பொருந்திய தேவர்கள்
அன்று தொட்டு அச்சமடையும்படி தோன்றிய என்றுமாம்; இதற்கு,
அச்சப்பொருட்டாய நாம் என்னும் உரிச்சொல் அம்முப் பெற்ற
தெனக்கொள்க. அஞ்சுதல் - இறைவனது முதன்மையும் தமது சிறுமையும்
உணர்ந்து ஒடுங்குதல். கலந்தென : விகாரம். ஆர்த்தார்
|