(இ
- ள்.) யாம் இனி இந்த வேலால் இறப்பதற்கு - இனி யாம் இந்த
வேற்படையால் மாளுவதற்கு, ஐயம் இல்லையாம் என - ஐயுறவு இல்லை
என்று கருதி, ஆயிரம் பரிக்கு ஓர் மன்னன் மாவோடு அகன்றான் - ஆயிரங்
குதிரைகளுக்கு ஒரு சேவகனாகிய சோழன் குதிரையோடு புறங்கொடுத்து
ஓடினான்; காமனை வெகுண்ட வேடன் மறைந்தனன் - மன்மதனை எரித்த
வேடனாகிய இறைவன் மறைந்தருளினான்; கங்குல் சோதி மாமகன் - இரவில்
விளங்கும் சந்திரன் மரபில் வந்த சுந்தரபாத சேகர பாண்டியன், அது கண்டு
ஓடும் வளவனைத் துரத்திச் சென்றான் - அதனைக் கண்டு ஓடுகின்ற
சோழனைத் துரத்திச் சென்றான்.
கங்குற்சோதி
- இரவில் ஒளிவிடும் திங்கள். மா - பெருமை. மகன் -
வழித் தோன்றல். (18)
துரந்திடு மளவி லோடுஞ் சோழனுந் திரும்பி நோக்கிக்
கருந்தடங் கண்ணி பாகங் கரந்தவே டுவனைக் காணான்
வருந்துய ரச்சந் தீர்ந்து மருரையி னளவும் பற்றிப்
புரந்தரற் புறங்கண் டானைப் புறங்கண்டு முடுக்கிப் போனான். |
(இ
- ள்.) துரந்திடும் அளவில் - அங்ஙனம் துரத்திச் செல்லுமளவில்,
சோழனும் திரும்பி நோக்கி - சோழன் திரும்பிப் பார்த்து, கருந்தடம் கண்ணி
பாகம் கரந்த - கரிய நீண்ட கண்களையுடைய உமையுடன் கூடிய பாகத்தை
மறைத்து வந்த, வேடுவனைக் காணான் - வேடனைக் காணாமையால், வரும்
துயர் அச்சம் தீர்ந்து - உண்டாகிய துன்பமும் அச்சமும் நீங்கி, புரந்தரன்
புறங்கண்டானை - இந்திரனைப் புறங்கண்ட பாண்டியனை, மதுரையின்
அளவும் பற்றி - மதுரை வரையிலும் தொடர்ந்து. புறம் கண்டு முடுக்கிப்
போனான் - முதுகு கண்டு முடுக்கிச் சென்றனன்.
காணாமையால்
தீர்ந்து முடுக்கிப் போனான் என்க. முன்னோன்
புரிந்த வீரச் செயலை அவன் மீது ஏற்றிப் 'புரந்தரற் புறங்கண் டானை'
என்றார். (19)
காலொன்று முடுக்கப் பட்ட கனலொன்று நடந்தா லொத்து
வேலொன்று தடக்கை நேரி வேந்தனான் முடுக்குண் டோடுஞ்
சேலொன்று கொடியி னான்றன் செழுநகர் விரைந்து செல்வான்
மாலொன்று களிற்றி னாங்கோர் மதுமலர்க் கிடங்கில் வீழ்ந்தான். |
(இ
- ள்.) கால் ஒன்று முடுக்கப்பட்ட - காற்றொன்றினாலே
துருத்தப்பட்ட, கனல் ஒன்று நடந்தால் ஒத்து - நெருப்பு ஒன்று
நடந்தாற்போல, வேல் ஒன்று தடக்கை நேரி வேந்தனால் முடுக்குண்டு -
வேற்படை ஏந்திய நீண்ட கையையுடைய நேரி மலையையுடைய சோழ
மன்னனாற் துரத்தப்பட்டு, ஓடும் சேல் ஒன்று கொடியினான் - ஓடுகின்ற
கயல் எழுதிய கொடியையுடைய பாண்டியன், தன் செழுநகர் விரைந்து
செல்வான் - வளம் பொருந்திய தனது நகர்க்கண் விரைந்து செல்லுகின்றவன்,
மால் ஒன்று களிற்றின் - மதமயக்கமுடைய யானை போல, ஆங்கு ஓர்
|