ஒருவன், அடியார்ககு
நல்லான் - அடியார்க்கு நல்லான் என்னும் பெயரினன்;
அறத்திற்கும் புகழுக்கும் நல்லான் - அறத்திற்கும் (அதனாலாம்) புகழுக்கும்
நல்லனாயுள்ளான்.
புனிதர்க்கு
ஏற்றுக் கொடியார்க்கு என ஒரு பொருண்மேற் பல பெயர்
வந்தன. வேதக் குடுமியானது எங்ஙனம் இறைவர் வசிக்கும் தூய இடமாமோ
அங்ஙனமே கூடற்பதியுமாமென்றார். சீர்த்தியையுடைய கூடற்பதி என இயக்க.
படியார்க்கும் என்பதில் கு : சாரியை. கூடலின் புகழ் புவி முழுதும் நிறைதல்,
"நிலனாவிற்
றரிதரூஉ நீண்மாடக் கூடலார்" |
எனக் கலித்தொகை
யுள்ளும் குறிக்கப்பட்டது. அடியார்க்கு நல்லான்
என்பதனைக் காரணப் பெயராகக் கொண்டவன் என்க. அடியார்க்கு
நல்லார் என்பது இறைவன் றிருப் பெயருமாம்;
"கருவூரு ளானிலை,
அண்ணலா ரடியார்க்கு நல்லரே" |
என்னும் ஆளுடையபிள்ளையார்
திருவாக்கும் காண்க. (2)
அனையா னறத்திற் கருள்போன்றவ ளான்ற கற்பின்
மனையாண் மரபின் வழுவாத தரும சீலை
எனையாரு நன்கு மதிக்க விருக்கு நீராள்
தனையாள் பதிக்குக் கதிக்குத்தனிச் சார்பு போல்வாள். |
(இ
- ள்.) அனையான் அறத்திற்கு அருள் போன்றவள் - அவள்
செய்யும் அறத்திற்கு அருள் போன்றவளாகிய, ஆன்ற கற்பின் மனையாள்
- நிறைந்த கற்பினையுடைய மனைவி, மரபின் வழுவாத தருமசீலை -
மரபிற்குரிய ஒழுக்கத்தினின்றுந் தவறாத தருமசீலை என்பவள்; எனை யாரும்
நன்கு மதிக்க இருக்கும் நீராள் - (அவள்) தன் கணவனேயன்றி ஏனை
யாவரும் நன்கு மதிக்குமாறு மனையறம் புரிந்திருக்குந் தன்மையையுடையவள்;
தனை ஆள்பதிக்குக் கதிக்குத் தனிச் சார்பு போல்வாள் - தன்னை ஆளும்
நாயகனுக்கு வீடெய்துதற்குரிய ஒப்பற்ற பற்றுக்கோடு போல்பவள்.
அறத்திற்குச்
சிறந்த துணையாவது அருள் ஆகலின் 'அறத்திற்கு
அருள் போன்றவள்' என்றார். எனையாரும் - யாவரும்; 'வாழுமுர் தற்
புகழும் மாண்கற்பின் இல்லாள்' என்றவாறு. வீடெய்துதற்குச் சிறந்த
துணையாகிய மெய்யுணர்வு போல்வாளென்பார் 'கதிக்குத் தனிச்சார்பு
போல்வாள்' என்றார். (3)
பல்லே ருழவின்
றொழில்பூண்டு பயன்கள் கொள்வான்
வில்லே ருழவன் கடன்கொண்டு மிகுந்த வெல்லாம்
இல்லே ருழத்தி் மடைச்செல்வ மியற்றி யேந்த
அல்லேறு கண்ட னடியாரை யருத்து நீரான். |
(இ
- ள்.) பல் ஏர் உழவின் தொழில் பூண்டு - பல ஏர்களால்
உழுதற்றொழிலை மேற்கொண்டு, பயன்கள் கொள்வான் - மிக்க ஊதியத்தைப்
|