II


கல்லானைக்குக் கரும்பருத்திய படலம்31



     (இ - ள்.) ஈண்டு உள்ளவர்க்கு எம் விளையாடலைக் காட்டி -
இங்குள்ளவர்களுக்கு எமது விளையாடலைக் காண்பித்து, வேண்டும் பல
சித்தியும் இச்சை நல்குவம் - (அவர்கள்) விரும்பும் பல பேறுகளையும்
விருப்பத்தின்படியே அருளுவோம்; வேதம் ஆதி மாண் தங்கும் எண்ணென்
கலை ஞானமும் வல்லம் - மறை முதலான மாட்சி தங்கிய அறுபத்துநான்கு
கலை ஞானங்களிலும் வன்மையுடையோம்; அல்லால் - இவையன்றியும், யாம்
சேண் தங்கும் எல்லாப் பொருளும் வல சித்தரேம் - யாம் சேய்மையிலுள்ள
பொருளனைத்தையும் (அண்மையில் வரச் செய்தலில்) வல்ல சித்தராவேம்.

     பலசித்தி - பலமாகிய பேறு; பலவாகிய சித்தி என்றுமாம். எல்லாப்
பொருளும் வல என்பதற்கு எல்லாப் பொருள்களையும் நிருமிக்க வல்ல
என்றுரைத்தலுமாம். (9)

உன்னால் நமக்குப் பெறல்வேண்டுவ தொன்று மில்லை
தென்னா வெனவுண் ணகைசெய்தனர் சித்த யோகர்
மன்னா மிவர்தம் மிறுமாப்புஞ் செருக்கும் வீறும்
என்னா லளவிட்ட டறிவேனென வெண்ணித் தேர்வான்.

     (இ - ள்.) தென்னா - பாண்டியனே, உன்னால் நமக்குப் பெறல்
வேண்டுவது ஒன்றும் இல்லை - உன்னாலே நாம் அடைதற் பாலதாகிய
பொருள் ஒன்றுமில்லை, என - என்று கூறி, உள் நகை செய்தனர் சித்த
யோகர் - புன்னகை புரிந்து நின்றனர் சித்த மூர்த்திகள்; மன் ஆம் இவர்
தம் இறுமாப்பும் செருக்கும் வீறும் - நிலைபெற்ற இவருடைய இறுமாப்பும்
செருக்கும் பெருமிதமுமாகிய இவற்றை, என்னால் அளவிட்டு அறிவேன்
என எண்ணித் தேர்வான் - யாதினாளலந்து அறிவேன் என்று அரசன்
எண்ணி ஆராய்வானாயினன்.

     நமக்கு : நாம் என எழுவாய்ப் பொருட்டு. ‘யாது வேண்டும்’ என
அரசன் வினாவியதற்கு ‘விடையாக வேண்டுவ தொன்றுமில்லை’ என்றார்.
நம்மால் நீ பெறுவதன்றி உன்னால் நாம பெறவேண்டுவ தில்லை என்றார்.
மன்ஆம் - மன்னுதலுடைய. என்னால் - எதனால். (10)

தேரும் பொழுதோ ருழவன்னொரு செல்வக் கன்னல்
ஆருங் கமுகென்ன வயிர்ப்புறக் கொண்டு தாழப்
பாருந் திசையும் புகழ்பங்கயச் செங்கை தாங்கி
நீரும் பிறையுங் கரந்தார்தமை நேர்ந்து சொல்வான்.

     (இ - ள்.) தேரும் பொழுது - அங்ஙனம் ஆராயும் பொழுது, ஓர்
உழவன் - ஓர் உழவனானவன், ஒரு செல்வக் கன்னல் - செழித்தோங்கிய
ஒரு கம்பினை, ஆரும் கமுகு என்ன அயிர்ப்புறக் கொண்டு தாழ - யாரும்
கமுகோ என்று ஐயுறக் கையிற் கொண்டு வணங்க, பாரும் திசையும் புகழ்
பங்கயச் செங்கை தாங்கி - (அக் கரும்பினைப்) புவியும் திசைகளும்
புகழும்படியான தாமரை மலர் போன்ற சிவந்த கையிற்றாங்கி, நீரும்