II


உலவாக்கோட்டை யருளிய படலம்311



     (இ - ள்.) நீ நாளும் பூசித்து - நீ தினந்தோறும் வழிபட்டு, அதில்
வேண்டிய கொண்டு - அக் கோட்டையில் வேண்டுமளவு பெற்றுக் கொண்டு,
நித்தம் ஆனாத அன்பர்க்கு அமுது ஊட்டி - நாடோறும் நீங்காத நமது
அடியார்கட்கு உணவு அருத்தி, எவர்க்கும் - யாவருக்கும் அன்னதான ஆதி
-அன்னதானம் முதலிய, நானா தருமங்களும் செய்தி - பலவேறு வகையான
அறங்களையுஞ் செய்யயக்கடவை; வீடு மேல் நாள் அளிக்கின்றனம் என்று
- முடிவில் வீடு பேறு அளிக்கின்றோமென்று, விசும்பில் கூற - வானின்கண்
அசரீரியாகக் கூறியருள.

     வேண்டிய : வினையாலணையும் பெயர். ஆனாத அன்பர் - குறையாத
அன்பினையுடையர் என்றுமாம். தானாதி : நெடிற்சந்தி. நானா - பல. (14)

கேட்டின்ப மெய்திக் கிளர்விம்மித னாகி வேதப்
பாட்டின் பயனைப் பணிந்தில்ல மடைந்து பண்டை
ஈட்டுந் தவப்பே றெனக்கண்டனன் றொண்டர்க் கெந்தை
கூட்டுங் கதிபோ லுலவாமற் கொடுத்த கோட்டை.

     (இ - ள்.) கேட்டு இன்பம் எய்தி - (அதனைக்) கேட்டு
மகிழ்ச்சியடைந்து, கிளர் விம்மிதனாகி - மேலெழுந்த விம்மிதத்தையுடைய
வனாய், வேதப் பாட்டின் பயனைப் பணிந்து - வேதப் பனுவலின்
பொருளாயுள்ள இறைவனைப் பணிந்து, இல்லம் அடைந்து - மனையையெய்தி,
பண்டை ஈட்டும் தவப்பேறு என - முற்பிறப்புக்களிலே தேடிய தவத்தின்
பயனைக் கண்டாற்போல, தொண்டர்க்கு - அடியார்கட்கு, எந்தை - எம்
பெருமான், கூட்டும் கதிபோல் - அடைவிக்கும் பேரின்பம் (என்றுங்
குறையாதிருத்தல்) போல, உலவாமல் கொடுத்த கோட்டை - குறையாதிருக்கக்
கொடுத்தருளிய கோட்டையை, கண்டான் - கண்டனன்.

     விம்மிதம் - அதிசயம். கோட்டையைத் தவப்பேறெனக் கண்டனன்
என முடிக்க. கோட்டையை என்னும் இரண்டனுருபு இறுதிக்கண் தொக்கது;

"ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின்
மெய்யுருபு தொகாஅ விறுதி யான"

என்பது தொல்காப்பியம். (15)

வானாறு சூடி தருகோட்டையை வைக றோறும்
பூநாறு சாந்தம் புகையொண்சுடர் கொண்ட ருச்சித்
தானாத செவ்வி யடிசிற்கு மதற்கு வேண்டும்
நானா கருவி விலைக்கும்மது நல்க வாங்கா.

     (இ - ள்.) வான் ஆறு சூடி - கங்கையைத் தரித்த சோம சுந்தரக்
கடவுள், தரு கோட்டையை - அருளிய கோட்டையை, வைகல் தோறும் -