II


312திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



நாள்தோறும், பூ நாறு சாந்தம் புகை ஒண்சுடர் கொண்டு அருச்சித்து
- மலரும் நறிய சந்தனமும் தூபமும் ஒள்ளிய தீபமும் என்னும் இவற்றாற்
பூசித்து, செவ்வி ஆனாத அடிசிற்கும் - பதம் நீங்காத அன்னத்திற்கும்,
அதற்கு வேண்டும் நானா கருவி விலைக்கும் - அவ்வன்னத்திற்கு வேண்டிய
கறிப் பொருள் முதலிய பலவேறு உபகரணங்கள் விலைப் பொருட்கும், அது
நல்க - அக் கோட்டை கொடுக்க, வாங்கா - கைக்கொண்டு.

     சூடி - சூடுதலையுடையான்; இ : வினை முதற்பொருள் விகுதி.
கொண்டு : மூன்றாம் வேற்றுமைச் சொல். (16)

மின்னார் சடையான் றமராய்ந்தவர் வேதச் செல்வர்
தென்னாடர் தெய்வம் விருந்தொக்கல் செறிந்து நட்டோர்
முன்னா மெவர்க்கு முகில்போல் வரையாம னல்கி
எந்நாளு நோயின் றளகாதிப னென்ன வாழ்ந்தான்.

     (இ - ள்.) மின் ஆர் சடையான் தமர் - மின் போன்ற சடையை
யுடைய சிவபெருமானது அடியார்களும், ஆய்ந்தவர் வேதச் செல்வர் -
வேதத்தை ஆராய்ந்தவர்களாகிய அந்தணர்களும், தென்னாடர் தெய்வம்
விருந்து ஒக்கல் - பிதிரரும் தெய்வமும் விருந்தும் சுற்றத்தாரும், செறிந்து
நட்டோர் - நெருங்கி நட்புச் செய்தோரும், முன் ஆம் எவர்க்கும் -
முதலாகிய யாவர்க்கும், முகில் போல் வரையாமல் நல்கி - மேகம் போல்
வரைவின்றிக் கொடுத்து, எந்நாளும் நோய்ய இன்று அளகாதிபன் என்ன
வாழ்ந்தான் - எஞ்ஞான்றும் வறுமை நோயின்றிக் குபேரன் போல வாழ்ந்து
வந்தான்.

     கலைகளை ஆய்ந்தவரும் வேதச் செல்வரும் என்றுமாம்.

"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தா றோம்ப றலை"

என்பவாகலின், தென்னாடர் முதலாயினோர்க் களிப்பது இல்வாழ்க்குரிய
பொது வறமாகும். சிவனடியார் முதலாயினார்க் களிப்பது சிறப்பறம். மேகம்
யாவரையும் நீக்காது பெய்தல் போல நீக்காமற் கொடுத்தென்க. நோய் -
துன்பமுமாம். அளகாதிபன் - அளகைப்பதிக் கிறைவன் : தீர்க்க சந்தி. (17)

[- வேறு]
அன்பன் னடியார்க் கினியா னனிநா ளளந்தல்கித்
தன்பன் னியொடு மயலார் சுற்றந் தமரோடும்
பின்பந் நிலையே யிமவான் மகளைப் பிரியாத
இன்பன் னுருவாய்ச் சிவமா நகர்சென் றிறைகொண்டான்.