(இ
- ள்.) விளை நிலன் - விளை நிலங்களையும், அடிமை - அடிமைகளையும், பைம்பூண்
- பசிய அணிகளையும், வெறுக்கை -
பொருள்களையும், நன் பசுக்கள் - நல்ல பசுக்களையும், ஏனை வளனும் -
பிற வளங்களையும், மாற்றவர் கைக்கொள்ள - பகைவர் கவர்ந்து
கொள்ள, வன்சிறை இழந்த புள்போல் - வலிய சிறைகளை இழந்த பறவை
போல, தளர்வு உறு மகனும் - மெலிவுற்ற புதல்வனும், தாயும் - அவனையீன்ற
அன்னையும், சார்பு இலாத் தம்மனோர்க்கு - பற்றுக் கோடில்லாத தம்
போல்வார்க்கு, ஒரு களை கணாய் இருக்கும் - ஒரு பற்றுக்கோடாயிருக்கும்,
கூடல் கடவுளே - கூடலம்பதியில் வீற்றிருக்கும் இறைவனே, சரணம் என்னா
- அடைக்கலம் என்று கருதி.
அடிமை
- ஏவலாட்கள். வெறுக்கை - பொன் முதலியன, ஏனை வளன்
- மனை, தோட்டம் முதலியன. (7)
வந்துவா னகடு போழ்ந்த மணிமுடி விமானக் கோயிற்
சுந்தர நாதன் பாதத் துணைதொழு திறைஞ்சி யார்க்குந்
தந்தையுந் தாயு மாகுந் தம்பிரா னீரே யெங்கட்
கெந்தையும் யாயு மென்னா விராங்கிநின் றினைய சொல்வாள். |
(இ
- ள்.) வந்து - வந்தெய்தி, வான் அகடு போழ்ந்த மணிமுடி
விமானக் கோயில் - விசும்பின் வயிற்றைக் கிழித் துயர்ந்த அழகிய
முடியினையுடைய இந்திர விமானமாகிய கோயிலில் வீற்றிருக்கும்,
சுந்தரநாதன் பாதத்துணை தொழுது இறைஞ்சி - சோமசுந்தரக் கடவுளின்
இரண்டு திருவடிகளையும் கும்பிட்டு வணங்கி, யார்க்கும் தந்தையும் தாயும்
ஆகும் தம்பிரான் - யாவர்க்கும் அத்தனும் அன்னையுமாகிய தம்பிரானே,
நீரே எங்கட்கு எந்தையும் யாயும் என்னா - தேவநீரே அடியேங்கட்கும்
தந்தையும் தாயுமாவீர் என்று, இரங்கி நின்று இனைய சொல்வாள் - வருந்தி
நின்று இத்தன்மையனவாய குறைகளைக் கூறுவாளாயினள்.
தம்பிரானாகிய
நீரேயென்றுமாம். யாய் - தாய். மகனும் தாயும் வந்து
வணங்கினர் எனவும், பின்பு தாய் இனைய சொல்வாள் எனவும் கொள்க. (8)
என்மகன்
றன்னை மைந்த னின்மையா லெவருங் காணத்
தன்மக னாகக் கொண்டு தகுதியா லன்றே காணி
பொன்மனை பிறவு நல்கிப் போயினா னென்மு னிப்பால்
வன்மையாற் றாயத் தார்க ளவையெலாம் வௌவிக் கொண்டார். |
(இ
- ள்.) என் முன் - என் தமையன், மைந்தன் இன்மையால் -
தனக்குப் பிள்ளையில்லாமையால், என் மகன் றன்னை - என் மகனை,
எவரும் காண - யாவருமறிய, தகுதியால் - கொள்ள வேண்டிய முறைப்படி,
தன் மகனாகக் கொண்டு - தன் புதல்வனாகக் கொண்டு, அன்றே -
அப்பொழுதே, காணி பொன் மனைபிறவும் நல்கிப் போயினான் - விளை
நிலம் பொன் மனை என்பவைகளையும் பிறவற்றையும் கொடுத்துப்
போயினான்; இப்பால் - பின்பு, தாயத்தார்கள், பங்காளிகள் அவை எலாம் -
|