விழித்தனள்
: முற்றெச்சம். கெட்டேன் : வியப்புணர்த்தும் இடைச்சொல்.
(13)
சென்றவள்
கங்கு லெல்லை தெரிந்தபி னெழுந்து வெள்ளி
மன்றவன் கோயில் வாயில் வந்துவந் தனைசெய் தம்பொற்
குன்றவ னுரைத்த வாற்றாற் கொடுமைசால் வழக்குப் பூட்டி
வென்றவ ரிருக்கை யெய்தி விளம்புவாள் பலருங் கேட்ப. |
(இ
- ள்.) சென்றவள் கங்குல் எல்லை தெரிந்த பின் எழுந்து -
அங்ஙனஞ் சென்றவள் இரவு புலர்ந்தவுடன் எழுந்து, வெள்ளி மன்றவன்
கோயில் வாயில் வந்து - வெள்ளியம்பல வாணனது திருக்கோயில் வாயிலை
யடைந்து, வந்தனை செய்து - வணங்கி, அம்பொன் குன்றவன் உரைத்த
ஆற்றால் - அழகிய பொன்மலையை (வில்லாக) உடைய பெருமான்
கூறியருளியவாறே, கொடுமைசால் வழக்குப் பூட்டி வென்றவர் - கொடுமை
மிக்க வழக்ககினைத் தொடுத்து வென்ற ஞாதிகளின், இருக்கை எய்தி -
இருப்பிடத்தை அடைந்து, பலருங் கேட்ப விளம்புவாள் - பலருங் கேட்கக்
கூறுவாள்.
கங்குல்
எல்லை தெரிதல் - இரவின் முடிவு தெரிதல்; இருள் புலர்தல்.
சென்றவள் எழுந்து வந்து வந்தனை செய்து இருக்கையெய்தி விளம்புவாள்
என முடிக்க. (14)
அட்டில்வாய் நெருப்பி டேலோ ரடியிடே லறத்தா றன்றிப்
பட்டிமை வழக்கால் வென்று போகொட்டேன் பலருங் கேட்க
இட்டன னரச னாணை யறத்தவி சேறி யான்றோர்
ஒட்டிய படிகேட் டெங்க ளுரிப்பொரு டந்து போமின். |
(இ
- ள்.)
அட்டில் வாய் நெருப்பு இடல் - அடுக்களையில் நெருப்பு
மூட்டாதே, ஓர் அடி இடேல் - ஓர் அடியும் பெயர்தது வையாதே, அறத்து
ஆறு அன்றி - அறநெறியால் அல்லாமல், பட்டிமை வழக்கால் வென்று
போக ஒட்டேன் - பொய் வழக்கினால் வென்று போக விடமாட்டேன்,
பலரும் கேட்க அரசன் ஆணை இட்டனன் - அனைவருஞ் சான்றாக அரசன்
மீது ஆணையிட்டேன், அறத்தவிசு ஏறி - தருமாசனத்தில் ஏறி, ஆன்றோர்
ஒட்டியபடி கேட்டு - நூலோர் ஆய்ந்து கூறுந் தீர்ப்பினைக் கேட்டு, எங்கள்
உரிப்பொருள் தந்து போமின் - எங்கள் உரிமைப் பொருளைக் கொடுத்துச்
செல்வீராக.
அடுக்களையில்
நெருப்பிடாதே, அடியெடுத்து வையாதே என ஆணை
கூறி மறிப்போர் உரைத்தல் வழக்கு. பட்டிமை - படிறு, வஞ்சம்.
போகொட்டேன் : அகரந் தொக்கது. ஒட்டியபடி - வாதித்துக் கூறும் தீர்ப்பு;
பலரும் ஒன்று கூடியுரைக்கும் தீர்ப்புமாம். ஒட்டியபடி கேட்டு
எங்களுரிப்பொருள் தந்து என்றமையால் வெற்றி தமக்கேயெனத் துணிந்து
கூறினாளாயிற்று. மகனை உளப்படுத்தி 'எங்கள்' என்றாள். உரி - உரிய.
இடேல் எனத் தனித்தனியே நோக்கிக் கூறி, போமின் என அனைவரையும்
நோக்கிக் கூறினாள் என்க. (15)
|