II


322திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) பெருவிலைக் குண்டலம் - பெரிய விலையினையுடைய
குண்டலங்கள், பிடரில் பத்தி பாய்ந்து எரிகதிர் கவிழ்ப்ப - பிடரியில்
நிரைபட விளங்கும ஒளியினை உமிழவும், வாள் எறிக்கும் அங்கதம் - ஒளி
வீசும் தோளணி, அருவரை தோள் கிடந்து இமைப்ப - அரிய மலை போன்ற
தோளிற் பொருந்தி ஒளி விடவும், ஆகம் மேல் குருமணிக் கண்டிகை
குலாய்ப்பின் கோட்ட - மார்பிற் கிடக்கும் நிறம் பொருந்திய மணிக்
கண்டிகை விளங்கிப் பின்னே வளைந்து கிடக்கவும்.

     (காதிலும் மார்பிலும் அணிந்த குண்டலங்களும் கண்டிகையும்
அசைதலால் முறையே பிடரிலும் முதுகிலும் ஒளி வீசி விளங்கின
என்றார். அங்கதம் - வாகுவலயம். அருமை - ஈண்டுப் பெருமை. (18)

முரலளி புறவிதழ் மொய்ப்பச் செய்யதா
மரைசிறி தலர்ந்தென மணிசெய் மோதிரக்
கரதலம் வீசியோர் கடுங்க ணேறெனப்
பெருமித நடைகொடு நடக்கும் பெற்றியார்.

     (இ - ள்.) முரல் அளி புற இதழ் மொய்ப்ப - ஒலிக்கின்ற வண்டுகள்
புற இதழில் மொய்த்துக் கிடப்ப, செய்ய தாமரை சிறிது அலர்ந்தென -
செந்தாமரைப் போது சிறிது மலர்ந்தாற்போல் விளங்கும், மணி செய் மோதிரக் கரதலம் வீசி - நீலமணியாற் செய்த மோதிரங்களையணிந்த கைகளை வீசி,
ஓர் கடுங்கண் ஏறு என - ஒரு வெகுளி நோக்கினையுடைய இடபம் போல,
பெருமித நடை கொடு நடக்கும் பெற்றியார் - செம்மாந்த நடையால் நடக்குந்
தன்மையுடையராய்.

     (விரல்கள் இதழ்கள் போலவும், விரல்களின் புறத்தணிந்த நீல மணி
மோதிரங்கள் இதழ்களின் புறத்து மொய்த்துள்ள வண்டுகள் போலவும்
விளங்கினவென்க. அலர்ந்தென. விகாரம். விளங்கும் என ஒரு சொல் விரிக்க.
ஏறு - சிங்கவேறுமாம். (19)

வாடிய முளரிபோன் மாறிட் டாரிடத்
தூடிய மலர்ந்தபோ தொப்ப மைந்தன்மேல்
நாடிய தண்ணளி நயந்து முட்கிடை
கூடிய முகத்தினர் குறுகு வாரவை.

     (இ - ள்.) வாடிய முளரிபோல் - வாட்டமுற்ற தாமரை மலரைப் போல, மாறு இட்டார் இடத்து ஊடியும் - பகைவிளைத்த ஞாதிகளிடத்துப்
பிணக்கினைக் காட்டியும், மலர்ந்த போது ஒப்ப - மலர்ந்த தாமரை மலரைப்
போல, மைந்தன் மேல் நாடிய தண் அளி நயந்தும் - புதல்வனிடத்துக்
கொண்ட தண்ணிய அருளை விருப்புடன் காட்டியும், உட்கிடை கூடிய
முகத்தினர் - உட்கருத்தைப் புலப்படுத்துவது போலும் முகத்தினராய், அவை
குறுகுவார் - மன்றின்கண் வருகின்ற பெருமானார்.

"அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சம்
கடுத்தது காட்டு முகம்"